வாக்கெடுப்பை கோரும் சஜித் அணி, முற்றுகிறது முறுகல்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடந்த பேச்சு முடிவுகள் ஏதுமின்றி முடிந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலரி மாளிகையில் நேற்று முன்தினம் இரவு மூடிய அறைக்குள், ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
இதன்போது, அதிபர் தேர்தலில் போட்டியிடத் தாம் விரும்புவதாக ரணில் விக்ரமசிங்க கூறினார்.
சஜித் பிரேமதாச, தாமும் போட்டியிட விரும்புவதாகவும் கட்சியில் பெரும்பாலானோர் தாம் போட்டியிடுவதையே விரும்புகின்றனர் என்றும் கூறியதாக ஒரு தகவல் கூறுகிறது.
எனினும், இந்தச் சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கட்சியின் நாடாளுமன்றக் குழு மற்றும் செயற்குழுவில், அதிபர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்துமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கோருவதற்கு, சஜித் பிரேமதாச ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
That will be good idea and good soluation.
ReplyDeleteRanil Wickremasinghe is "TOTAL BETRAYAL". Sri Lankans who love their "Maathruboomiya" cannot forget the betrayal he did on February 22nd., 2002 when he signed a so-called "peace truce" with Prabakaran, the LTTE leader with the conaivance of Norway, behind the back of then President Chandrika Bandaranaike Kumaratunge. She accused Wick-remesinghe of violating the Constitution for having shown her the deed a day after the LTTE chief had signed it. Sri Lankan Muslims should realize how this so-called peace treaty sidelined the Muslims, especially in the North and Eastern provinces and how much we suffered as a result of Ranil signing this. Now Ranil is doing similar international treaties behind the back of President Maithripala Sirisena too. The UNP should decide who they want at the next Presidential and General Elections - "SAJITH or RANIL as their leader. For the UNP it should be SAJITH. Between SAJITH and GOTABAYA, Sri Lankans who love their "Maathruboomiya" should vote GOTABAYA.
ReplyDeleteNoor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.