Header Ads



வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் சஜித்தான் - மங்கள

ஐனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் சஜித் பிரேமதாச என்று தான் உண்மையில் நாங்கள்நினைக்கின்றோம். அவ்வாறு வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் ஒருவரையே நாங்கள் விரைவில் பெயரிடுவோம் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஐயம் செய்த அமைச்சர் மங்கள சமரவீர வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற
நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த பொது ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய
கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..

அடுத்த ஐனாதிபதித் தேர்தலில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். ஆவ்வாறு வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்ஒருவரை நாங்கள் விரைவில் பெயரிடுவோம். ஆனால் உண்மையில் எங்களுக்கு பல தரப்பட்ட கருத்துக்கள் எண்ணங்கள்
இருக்கலாம். ஆனால் அவ்வாறு பெற்றி பெறக் கூடிய வேட்பாளர் சஜித் பிரேமதாசா தான் என்று நாங்கள் உண்மையில்நினைக்கின்றோம்.

ஆயினும் அப்படியாக ஒரு தீர்மானத்தை இதுவரையில் எடுக்கவில்லை. ஏனெனில் அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டியதுபாராளுமன்றக் குழுவும் செயற்குழுவுமே தான். அதனடிப்படையில் பாராளுமன்றக் குழுவும் மற்றும் செயற்குழுவும் கூடி அங்கு பெரும்பான்மையானவர்கள் என்னத்தைச் சொல்கின்றனரோ அதனைத் தான் கட்சி செய்யும் – என்றார் மங்கள

3 comments:

  1. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மங்கள சமரவீரவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் என்ற கருத்து எவருக்கும் தோன்றவில்லையா? இந்தப் பக்கமும் சற்று யோசித்துப் பார்ப்போமே?

    ReplyDelete
  2. ஸுஹுட் உங்கள் கருத்துக்கு நன்றி ஆனால் இந்த நாட்டு சட்டப்படி ஜனாதிபதியாக வருபவர் திருமணம் செய்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதாக நினைக்கிறேன்

    ReplyDelete

Powered by Blogger.