Header Ads



பலவீனமுற்று இலக்குகள் இன்றி அலைந்து திரியும், இந்த இனத்தை முன்னேற்ற செயற்திட்டம் இல்லை

70 வருடங்களாக எந்தவொரு தலைவரும் நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விமர்சித்துள்ளார்.

'ஒரே குழுவாக ஒட்டுமொத்த நாடு என்ற தலைப்பில் பலாங்கொடையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

கடந்த எழுபது வருடங்களாக ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மாறி மாறி பல்வேறு ஆட்சியாளர்கள் நாட்டை நிர்வகித்துள்ளனர். ஆனால் சுதந்திரத்தின் பின் பதவிக்கு வந்த எந்தவொரு தலைவரும் நாட்டை அபிவிருத்தி செய்வதில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

பல்வேறு காரணிகளால் பலவீனமுற்று, தளர்ச்சியடைந்து, இலக்குகள் இன்றி அலைந்து திரிந்து கொண்டிருக்கும் இந்த இனத்தை முன்னேற்றுவதற்கான செயற்திட்டமொன்று எந்தவொரு அரசியல் தலைவரிடமும் இல்லை.

நாங்கள் ஒரே குழுமமாக வாழ்ந்த ஒரு இனம். நீலம், பச்சை, சிவப்பு என்று நிறங்களாலும் கட்சிகளாலும் பிரிக்கப்பட்டு பலவீனமாகிப் போயுள்ளோம். அதன் காரணமாக சிங்கள, தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரிய அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மனோநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பாரம்பரிய அரசியலானது தற்போதைக்கு நம் இனத்தவர் மத்தியில் தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. முதலில் இனவாதம் பேசி நாட்டுக்குள் கலவரங்களை/மக்களுக்கு இடையே இனக்கலவரங்கலை உண்டு பண்ணுவதையும் நிறுத்துங்கள் முதலில்,பிறகு பாருங்கள் நாட்டின் வளர்ச்சியை

    ReplyDelete
  2. PERUM PITHALAATTAKARAN.
    IVANUKKURIYA IDAM, SHIRAICHAALAI
    THAVIRA, VERILLAI.

    ReplyDelete

Powered by Blogger.