முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல என்ற, எண்ணம் கொண்ட நாடொன்று தேவைப்படுகின்றது - மஹிந்த
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
வைராக்கிய அரசியலை தான் ஒருபோதும் முன்னெடுக்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
போராட்டங்களை நடத்தி, அச்சுறுத்தல்களை விடுத்து முன்னெடுத்த அரசியலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அரசாங்கம் ஜெனிவாவில் உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் போதும், மண் சரிவு ஏற்படும் போதும், கொழும்பு முதல் மட்டக்களப்பு வரை குண்டு வெடிக்கும் போதும், வரி அறவிடும் போதும், கொழும்பில் குப்பை துர்நாற்றம் வீசும் போதும் இந்த நாட்டு மக்களுக்கு தம்மை நினைவு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டுக்காக எமது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், 2015ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கியதை விடவும் மோசமான நாடொன்றையே எம்மால் பெறுப்பேற்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
‘சிறந்த நாடொன்றை கட்டியெழுப்புவதற்காக இன்றைய தினம் நாம் புதிய கட்சியொன்றை உருவாக்கினோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கினோம். இந்த கட்சியை உருவாக்கிய பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினருக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். அரசாங்கம் எங்களுக்கு பாரிய அளவில் அச்சுறுத்தல்களை விடுத்திருந்தது. அதையும் தாண்டி நாம் இந்த கட்சியை உருவாக்கியுள்ளோம். போராட்டங்களை நடத்தி, அச்சுறுத்தல்களை சந்தித்து இந்த இடத்திற்கு வந்தோம். எமது குடும்பம் ஆட்சி அமைக்க முடியாது வகையில் அரசியலமைப்பை இந்த அரசாங்கம் மாற்றியமைத்தது. எமது சுதந்திரத்திற்காக நாட்டின் சுதந்திரத்தை நாம் விட்டு கொடுக்கவில்லை. நாட்டின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. எம்மை இனவாதிகள் என கூறினார்கள். நாம் அவ்வாறு கிடையாது. ஆனால் இந்த அரசாங்கம் எந்தவொரு மதத்திற்கும், மார்க்கத்திற்கும் மதிப்பளிக்கவில்லை. நாம் வைராக்கியம் வைப்போத்தோம் என கூறினார்கள். வைராக்கியம் வைத்து வெற்றிக் கொள்வதற்கு தற்போது ஒன்றும் எனக்கு கிடையாது.இந்த அரசாங்கம் ஜெனிவாவில் உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் போதும், மண் சரிவு ஏற்படும் போதும், கொழும்பு முதல் மட்டக்களப்பு வரை குண்டு வெடிக்கும் போதும், வரி அறவிடும் போதும், கொழும்பில் குப்பை துர்நாற்றம் வீசும் போதும் இந்த நாட்டு மக்களுக்கு எம்மை நினைவுக்கு வந்தது. நாட்டுக்கு எமது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், 2015ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நாட்டை விடவும் மோசமான நாடொன்றையே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. அச்சமின்றி விஹாரைக்கு சென்று, அன்னதானம் கொடுக்கக்கூடிய நாடொன்றை உருவாக்க வேண்டும். கிறிஸ்தவர்கள், இந்துக்கள், முஸ்லிம்களுக்கு அச்சமின்றி அவர்களது மதத்தலங்களுக்கு செல்லக்கூடிய வகையிலான நாடொன்றை உருவாக்க வேண்டும். முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல என்ற எண்ணம் கொண்ட நாடொன்று தேவைப்படுகின்றது. 365 நாட்களும் அவதானத்துடன் இருக்கக்கூடிய தலைவர் ஒருவர் தேவை. நாடொன்றில் ஒழுக்கம் இருக்க வேண்டும். சட்ட ஒழுங்கு வேண்டும். நண்பகலில் கொள்ளை, கொலை இடம்பெறுமாயின், இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு கிடையாது. அவ்வாறு ஒழுக்கம் உள்ள ஒருவர் தேவைப்படுகின்றார். உலகிலேயே மிக மோசமான தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் என 2005ஆம் ஆண்டு யாரும் நினைக்கவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு தமது குழந்தைகளை சுதந்திரமான ரயிலில் அழைத்து வர முடியும் என தமிழ் மக்கள் நினைக்கவில்லை. முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடத்திற்கு செல்ல முடியும் என அவர்கள் நினைக்கவில்லை. ஆசியாவிலேயே மிக சுத்தமான நகரமொன்றை உருவாக்க முடியும் என யாரும் நினைக்கவில்லை. நாம் அதனை செய்தோம். எதிர்காலத்தில் அவ்வாறு செய்யக்கூடிய ஒருவர் தேவைப்படுகின்றார். 30 வருட காலம் வடக்கு தமிழ் மக்களின் ஜனநாயகம் இல்லாது செய்யப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்திலுள்ள நூலகத்தை எரித்தது. இந்த நிலையில், வடக்கில் மாகாண சபை தேர்தலை 30 வருடங்களின் பின்னர் நாமே அந்த தேர்தலை நடத்தினோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு பின்னரே வடக்கிற்கு சென்றது. வடக்கு மக்களின் ஜனநாயகம் பறிக்கப்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு ஜனநாயகத்தை மீண்டும் வழங்க வேண்டும். வடக்கு கிழக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.” – என்றார் மஹிந்த
Post a Comment