8 வயது சிறுவனை, பாலியல் துஷ்பிரயோகம் பௌத்த பிக்கு கைது
திருகோணமலையில் 8 வயது சிறுவன் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுரு ஒருவர் நேற்றிரவு -12- கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளார்.
கோமரங்கடவல, மதவாச்சிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய, சுறுலு மஹா முனியாவ என்ற விகாரையின் விகாராதிபதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மதகுரு, கடந்த எட்டாம் திகதி தனது மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறுவனின் பெற்றோர்கள் பொலிஸாரிடத்தில் தெரிவித்துள்ளனர்.
துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரியவருகின்றது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மதகுருவை இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Where is Terror BBS and Other Terror Monks. End of Buddhism...
ReplyDeleteබුද්ධාගම අවසන්. සියලුම සිංහලයන්ට දැන් ක්රිස්තියානි ධර්මය හෝ ඉස්ලාමය අනුගමනය කළ යුතුය ...
ReplyDeleteMr. Ranjan Please come and fight against this Barbaric Sinhalay Monk
ReplyDeleteMr. Ranjan Please come and fight against this Barbaric Sinhalay Monk
ReplyDeleteThe accused may get Presidential pardon, if convicted.
ReplyDelete