அமைச்சர்கள் அதிகாலையில் எழுந்திருப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் காலை 7.30 மணிக்கு
வாழ்க்கையில் சாதிப்பவர்களின் பிரதான பண்பு அதிகாலையில் எழும்புவதாகும் எனவும், அதிகாலையில் எழும்புவதை வலியுறுத்தும் வகையிலேயே ஒவ்வொரு வாரமும் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தை தான் காலை 7.30 மணிக்கு மாற்றியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.
அமைச்சரவைக் கூட்டத்தை இவ்வாறு மாற்றிய போது சில அமைச்சர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்ததாகவும், சிலர் தாமதமாகியே வருகை தருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்
கண் கெட்ட பின் சூரியோதயம்
ReplyDeleteஏற்கனவே பாராளுமன்றம் 10 மணிக்கு ஆரம்பித்தால் அப்போது சமூகமளித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மந்தி(ரி)களின் வரவு நூற்றுக்கு 4% தான். காலை 7.30 மணிக்கு ஆரம்பித்தால் அந்தக் காலத்தில் ஆர்.பிரேமதாஸ எல்லா நாற்காலிகளுக்கும் சர்வகட்சி மாநாடு நடத்தியதுபோல் சபாநாயகர் பாராளுமன்ற நாற்காலிகளுக்கு மக்கள் செலவில் ஒரு நாளைக்கு மக்களிள் பணம் 85 இலட்சம் ரூபாக்களை மண்ணாக்கி பாராளுமன்றக் கூட்டத்தொடரை நடாத்திவைக்கலாம்
ReplyDelete