Header Ads



பிக்குகள் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபாடு - 7 பிக்கு சிறார்களுக்கு எயிட்ஸ்

7 சிறுவர் பௌத்த பிக்குகள் எயிட்ஸ் தொற்றுக்கான சிகிச்சைகளை பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவிக்கின்றார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார். தொடர்ந்தும் புசிய அவர்,

பௌத்த பிக்குகள் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பௌத்த பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கான காணொளிகளும் தன்னிடம் உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். இந்த காணொளியை வைத்து, யார் அந்த பௌத்த பிக்கு என்ற அடையாளத்தையும் காண முடியும்.

பௌத்த பிக்குகள் மாத்திரமன்றி, ஏனைய சமயத் தலைவர்களும் பாலியல் துஷ்பிரயோகம், மோசடிகள், ஊழல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு தரப்பினர் வந்தாலும், தான் ஆதாரங்களும் அதனை வெளியிட தயாராகவே உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவிக்கின்றார்.

2 comments:

  1. இதுக்கு ஒரு அமைச்சரவை பத்திரம் போட சனாதிபது
    தூண்டலாமே

    ReplyDelete
  2. Its against Buddha teaching, President should appoint a commission for investigation to protect Podi Hamduru.

    ReplyDelete

Powered by Blogger.