தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் - 6 வருடங்களின் பின் கிடுகிடு என உயர்வு
உலக சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
ஒரு அவுன்சு தங்கத்தின் விலையானது 1522 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
கடந்த 6 வருடங்களில் இம்முறையே தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
உலக தங்க சந்தையில் 60 சதவீத பங்கினை கொண்டுள்ள இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தற்போது சரிவை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, இந்திய சந்தையில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 வீதத்திலிருந்து 12.5 சதவீதத்தை எட்டியதையடுத்து, தங்கத்தின் விற்பனை விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment