“ஐதேக வேட்பாளர் இல்லையென்றால், வணக்கம் கூறிவிட்டு 5 ஆண்டுகளுக்கு ஓய்வெடுக்க தயார்”
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவும் கட்சியின் தலைமைக்கும் தலைவர்கள் வரிசை உள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.
காலி நகரில் இன்று -09- நடந்த வைபவம் ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளாார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வரிசையாக தலைவர்கள் இருக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி ஒரு குடும்பத்தை நம்பி இருக்கும் கட்சியல்ல.
ராஜபக்ச சரணம் கச்சாமி எனக் கூறிக்கொண்டு நாங்கள் அண்ணன், தம்பிகள் பின்னால் செல்ல மாட்டோம். மக்கள் நேசிக்கும் வேட்பாளரை நாங்கள் தேர்தலில் நிறுத்துவோம்.
கட்சிக்குள் வாயை மூடிக்கொண்டிருப்பது கண் தெரியாது என்பதற்கல்ல. கட்சியின் ஐக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே வாயை மூடிக்கொண்டிருக்கின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியை சேராத வேட்பாளர் கட்சியின் உதவியுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், “பந்துலால் பண்டாரிகொட வணக்கம் கூறி விட்டு, 5 ஆண்டுகளுக்கு ஓய்வெடுக்க தயார்” எனவும் பண்டாரிகொட குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment