ரணிலுக்கு எதிராக 50 எம்.பி.க்கள் அணிதிரள்வு...!
ஐதேகவின் அதிபர் வேட்பாளரை தீர்மானிப்பதற்கு கட்சியின் நாடாளுமன்றக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டுமாறு, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரும் கடிதம் ஒன்றில் 50இற்கும் மேற்பட்ட ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜித் பிரேமதாச ஆதரவு அணியே, இந்த கையொப்பங்களைத் திரட்டி வருகிறது.
இந்தக் கடிதம் அடுத்த வாரம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பப்படவுள்ளது.
சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனக் கோரும் அணிக்கும், கரு ஜெயசூரியவை வேட்பாளராக அறிவிக்க முனையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அணிக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே, கட்சியின் நாடாளுமன்றக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டி முடிவெடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மிகம் நல்லது சஜித் வருவது.ஏனெனில் ரனில் தற்போது ஒரு ஆற்றல் இல்லாத ஒரு மனிதர்,அவருக்கு எந்தவித செல்வாகும் மக்கள் மத்தியில் இல்லை.கோதாவுக்கு மிகச் சிறந்த போட்டியாளர் சஜித்தைதவிர வேரு போட்டியாளர் யாருமிலை.
ReplyDelete