மட்டக்களப்பு பல்கலைக்கழகம் பற்றி ஆராய, ஹக்கீம் உள்ளிட்ட 4 பேர் கொண்ட அமைச்சரவை உபகுழு
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பாக ஆராய்வதற்காக நான்கு அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் இதனை நேற்று நாடாளுமன்றில் வைத்து தெரிவித்தார்.
அமைச்சர்களான மனோகணேசன், மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோர் இந்த அமைச்சரவை உபகுழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
அவர்களுக்கு இடையிலான சந்திப்புகள் நடத்தப்பட்டு, இந்த தனியார் பல்கலைக்கழகம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கைப்படுத்தும் என்று அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment