Header Ads



ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு மரண தண்டனை

பழைய தகராறு ஒன்று முற்றியதில் 32 வயதான ஒருவரை கொலை செய்து, மற்றுமொருவருக்கு படுகாயம் ஏற்படுத்திய மூன்று பேருக்கு குருணாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி பொல்காவலை போராவத்தை பகுதியை சேர்ந்த 32 வயதான பட்டகொல்லே கேதர நிஷ்சங்க விஜேவீர என்பவரை வெட்டி கொலை செய்து, 58 வயதான ஆரியதாச என்பவரை கற்களால் தாக்கி படுகாயம் ஏற்படுத்தியதாக மூன்று பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

போரவத்தை பகுதியை சேர்ந்த புல்ஹித் தேவாலகே விக்ரமபால, புல்ஹித் தேவாலகே செனரத் சமரசிங்க, புல்ஹித் தேவாலகே பிரதீப் சஞ்சீவ ஜயரத்ன ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் மகனை கொலை செய்து, அவரது தந்தையை காயப்படுத்தியுள்ளனர். பொல்காவல பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியிருந்தனர்.

No comments

Powered by Blogger.