இலங்கை பெண் சுஹாரா உம்மா படுகொலை - பங்களாதேஸில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
2004ம் ஆண்டு இலங்கை பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த இருவருக்கு பங்களாதேஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
டாக்கா விசேட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஆயுள் தண்டனையை பெற்றவர்கள் இருவரும் பங்களாதேஸை சேர்ந்தவர்களாவர். குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்றும் ஒருவர் நீதிமன்றத்தில் இதுவரை ஆஜராகவில்லை.
இலங்கை பெண்ணான சுஹாரா உம்மா 2004 ஜனவரி 28ம் திகதி அவரது வீட்டில் வைத்து கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment