Header Ads



18 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை

(எம்.மனோ­சித்ரா)

பலத்த காற்றின் கார­ண­மாக நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் நூற்­றுக்கும் மேற்­பட்ட மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் அம்­ப­க­முவ பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட 28 குடும்­பங்­களைச் சேர்ந்த 146 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. இப்­பி­ர­தே­சங்­களில் 28 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளன. 

மேலும் புத்­தளம், கேகாலை மற்றும் வவு­னியா ஆகிய மாவட்­டங்­க­ளிலும் பலத்த காற்­றினால் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். புத்­த­ளத்தில் 20 குடும்­பங்­களைச் சேர்ந்த 58 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு, 11 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளன. 

கேகாலை மாவட்­டத்தில் 11 குடும்­பங்­களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு, 11 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளன. வவு­னி­யாவில் 7 குடும்­பங்­களைச் சேர்ந்த 23 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு 6 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளன. 

காற்றின் வேகம் - சிவப்பு எச்­ச­ரிக்கை

நாட­ளா­விய ரீதியில் 18 மாவட்­டங்­களில் 70–80 கிலோ மீற்­றரை விட அதி­க­மான காற்று வீசக் கூடும் என்று இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. இன்று காலை 9 மணி­வரை இந்த சிவப்பு எச்­ச­ரிக்கை நடை­மு­றை­யி­லி­ருக்கும் என்றும் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. 

யாழ்ப்­பாணம்,  கிளி­நொச்சி, மன்னார், முல்­லைத்­தீவு, வவு­னியா, திரு­கோ­ண­மலை, அநு­ரா­த­புரம், புத்­தளம், பொலன்­ன­றுவை, குரு­ணாகல், மாத்­தளை, கண்டி, கம்­பஹா, கொழும்பு, நுவரெ­லியா மற் றும் களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கே இவ்­வாறு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

அத்­தோடு வடக்கு, வட­மத்­திய, வட மேல் மாகா­ணங்­க­ளிலும், திரு­கோ­ண­மலை மற்றும் மாத்­தளை மாவட்­டங்­க­ளி லும் காற்றின் வேகம் மணித்­தி­யா­லத்­துக்கு 70–80 கிலோ மீற்றர் அதி­க­ரித்துக் காணப்­படும். 

கடற்­ப­ரப்பு 

நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து மட்­டக்­க­ளப்பு வழி­யாக மன்னார், காங்­கே­சன்­துறை மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய கடற்­ப­ரப்­புக்­களில் காற்றின் வேகம் மணித்­தி­யா­லத்­துக்கு 60–70 கிலோ மீற்றர் வீசும் என்று வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. எனினும் பகல் அல்­லது இரவு வேளை­களில் கடற்­பி­ர­தே­சங்­க­ளிலும் காற்றின் வேக­மா­னது 80 கிலோ மீற்­றரை விட அதி­க­ரிக்­கலாம் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே குறிப்­பிட்ட கடற்­ப­ரப்பில் மீன்­பி­டிக்கு செல்ல வேண்டாம் என்று மீன­வர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. 

மழை வீழ்ச்சி

புத்­த­ளத்­தி­லி­ருந்து திரு­கோ­ண­ம­லை­யூ­டாக மன்னார், காங்­கே­சன்­துறை மற்றும் முல்­லைத்­தீவு, பொத்­துவில் தொடக்கம் மட்­டக்­க­ளப்பு வரை­யான கடற்­ப­ரப்­புக்­களில் அதிக மழை வீழ்ச்சி பதி­வாகக் கூடும். காற்றின் வேகம் அதி­க­ரிக்கும் சந்­தர்ப்­பங்­களில் மழை அல்லது இடியுடன் மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், யாழ்ப்பாணம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.