பாட்டியை கொலைசெய்த குற்றச்சாட்டில், 16 வயது சிறுவன் கைது
வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி பகுதியில் தனது பாட்டியை கொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 15 மற்றும் 16 வயதான சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தகராறில் முடிந்துள்ளது.
தகராறை விலக்க அவர்களின் பாட்டி முயன்றுள்ளார்.
இதன்போது, 16 வயதான சிறுவன் தனது சகோதரனை நோக்கி கத்தியை எறிந்த போது, பாட்டி தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 72 வயதான வயோதிபப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டு சகோதரர்களும் “ஆவா” குழு உறுப்பினர்கள்.எதிர்காலத்தில் ஆயுத குழுவாக பரினாமிக்க வாய்ப்புள்ள பயங்கரவாதிகள்.இப்பவே புனர்வாழ்வு கொடுப்பது நல்லது.இல்லாவிட்டால் பல்லாயிரம் மக்களை கொல்லும் மிருகங்கலாக இரண்டும் மாறிவிடும்.
ReplyDelete