Header Ads



11 ஆம் திகதி மஹிந்தவுக்கு, கிடைக்கவுள்ள தலைமைப் பதவி

பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 11ம் திகதி உத்தியோகப்பூரவமாக ஏற்பார்.  பாராளுமன்ற உறுப்புரிமை குறித்த  எழும்  பிரச்சினைகளுக்கு  சட்ட ரீதியில் தீர்வு காண எம்மால் முடியும். என பொதுஜன பெரமுனவின்  தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன  பெரமுனவின் தலைமை காரியத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின்  சம்மேளன கூட்டம் இம்மாதம் 11ம் திகதி   சுஹததாஸ உள்ளக அரங்கில் இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வின் போது    பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமான  ஏற்பதுடன்,   உத்தேச  ஜனாதிபதி தேர்தலின்  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி  வேட்பாளர் யார் என்பதையும்  நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

பொதுஜன பெரமுன தேர்தலின் வெற்றியினை இலக்காகக் கொண்டு தற்போது முறையான செயற்திட்டங்களை வகுத்து செயற்படுகின்றது என வும் அவர் இதன்போது தெரிவித்தார்.

1 comment:

  1. MAY ALMIGHTY GIVE US A RIGHT AND HONEST LEADER IN THE FUTURE.
    MAY ALMIGHTY GIVE US UNITY WITH ENTIRE MUSLIMS.UNITY ONLY WILL BRING GOOD DECISION FROM ALMIGHTY.

    ReplyDelete

Powered by Blogger.