UNP யை காப்பாற்ற வேண்டுமானால், சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக்கப்பட வேண்டும் - கபீர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று அமைக்கப்படவிருக்கும் தகவல் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என கட்சியின் தவிசாளரான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் கூட்டணி ஒன்று அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டணி எதிர்வரும் ஆகஸ்ட் ஐந்தாம் திகதியன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே கட்சியின் தவிசாளர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் கூட்டணி அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் ஊடகங்கள் மூலமே தெரிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இது குறித்து கபீர் ஹாசிமுடன் தனிப்பட்ட ரீதியில் பேசப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்ற வேண்டுமானால் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக்கப்பட வேண்டும் என்று கபீர் ஹாசிம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr kabeer hasim wrong statment.
ReplyDeleteWe need a leader to protect our country.not only unp party.without good country no meaning of party.