Header Ads



வீடியோவை வெளியிட்ட பயணி, மன்னிப்பு கோரியது SriLankan Airlines

விமானத்தின் மோசமான நிலை குறித்து பயணி ஒருவர் வெளியிட்ட காணொளியை தொடர்ந்து SriLankan Airlines மன்னிப்பு கோரியுள்ளது.

அந்த வகையில், விமானத்தில் பயணிகள் எதிர்நோக்கிய சிரமங்களுக்கு SriLankan Airlines கவலை வெளியிட்டுள்ளது.

மாலைதீவில் இருந்து இலங்கைக்கு SriLankan Airlines க்கு சொந்தமான UL – 104 வந்துள்ளது. குறித்த விமானத்தில் ஆசனங்கள் சரியாக பொருத்தப்படவிலலை.

அத்துடன், தொலைக்காட்சிகள் வேலை செய்யும் நிலையில் இல்லை என்றும், ஒரு இருக்கைக்கு பொருத்தப்பட்ட உணவு தட்டு தரையில் விழுந்ததாகவும் பயணிகள் கூறியிருந்தனர்.

மேலும், மெனுவில் இல்லாத உணவை அவர்களுக்கு வழங்குவதாகவும் பயணி கூறினார். எவ்வாறாயினும், புறப்படுவதற்கு முன்னர் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை என்று SriLankan Airlines தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்த பணியாளர்கள் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக SriLankan Airlines தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.