இறுதி நேரத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகளை சந்தித்த ரணில் - JVP பொய் சொல்கிறது என்கிறார் ஹரீஸ்
- AAM. Anzir -
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஆரம்பமாக முன்னர் (மாலை 6.20 மணிவரை) முஸ்லிம் அரசியல்வாதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கசந்தித்துள்ளார்.
இதன்போது கல்முனை குறித்து ஆராயப்பட்ட நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்னும் 2 வாரங்களில் வரவுள்ளது. இந்நிலையில் அந்த அறிக்கை வந்தவுடன் இதுபற்றி ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கப்பம் கொடுத்தே ரணில் பிரேரணையை வெற்றிகொண்டார், கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து மூலம் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைபினருக்கு உத்தரவாதம் கொடுத்தே அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டதாக அநுரகுமார திசாநாயக்கா குறிப்பிட்டதை தாம் நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார்
இருக்கலாம் ரனிலை நம்ப முடியாது இருந்தாலும் நீங்களும் கொஞ்ஞம் உசாராக,உன்னிப்பாக இருங்கள்.
ReplyDelete