Header Ads



குண்டுத்தாக்குதலுக்கு IS அமைப்பு உரிமை கோரியது அரசின் பொய்

(இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு தின  குண்டுத்தாக்குதலுக்கும் ஐ. எஸ். அமைப்பினருக்கு தொடர்பு உள்ளதாக எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என்று   பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிடுவது  தாக்குதலுக்கு  ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என  அரசாங்கம்  கடந்த மூன்று மாத காலமாக குறிப்பிட்டவை பொய் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில்  இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஈஸ'டர் தின  குண்டுத்தாக்குதல் பூகோளிய     பயங்கரவாத அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது. ஆகவே  சர்வதேச தீவிரவாதத்தை  வெற்றிக் கொள்ள வேண்டுமாயின்   பயங்கரவாத  எதிர்ப்பு சட்டத்தை  நிறை வேற்ற வேண்டும் என்று  பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். குண்டுத்தாக்குதலை  வைத்து அதனூடாக  பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்கலாம்  என்றே பிரதமர் எண்ணினார்.

குண்டுத்தாக்குதலுக்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் தொடர்பு  காணப்பட்டது என்பதற்கு எவ்வித உரிய தகவல்களும் கிடையாது என  குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத   விசாரணை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளமை  கவனிக்கத்தக்கது.   தாக்குதல் இடம் பெற்று மூன்று  மாதங்கள் கடந்துள்ள நிலையிலும்  எவர்,எக்காரணங்களுக்காக தாக்குதலை முன்னெடுத்தார்கள் என்பது இதுவரையில் எவ்வித மாறுப்பட்ட கேள்விகளும் இன்றி  உறுதிப்படுத்தப்படவில்லை.

தாக்குதலுக்கு எந்த அமைப்பு உரிமை கோரவில்லை என்ற இருக்கும் பட்சத்தில் எவ்வாறு   தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று நம்பிக்கை கொள்ள முடியும். குண்டுத்தாக்குதல் தொடர்பில்  பாராளுமன்ற அமைச்சர்கள். மற்றும் எதிர் தரப்பினர்கள் குறிப்பிட்ட   கருத்துக்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித  முறையான விசாரணைகளும் இடம் பெறவில்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அனைவரினது கவனமும்  ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய  நிலையில் காணப்படும் போது  சுதந்திர கட்சியினர்  மாத்திரம்   மாகாண சபை தேர்தலை நாடுவது மாறுப்பட்ட சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. முறையான  தலைமைத்துவத்தின் கீழே மாகாண சபை தேர்தல் இடம் பெற வேண்டும். என்றார்.

No comments

Powered by Blogger.