"புத்தரின் சிலையில் கூட, Dr ஷாபியின் முகமே தெரியும்"
- Gowripal Sathiri Sri -
சுமார் 8000 ஆயிரம் சிங்கள பெண்களுக்கு மகப்பேற்று சிகிச்சை செய்தபோது கருத்தடை செய்தார் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ஷாபி விடுதலை செய்யப்பட்டுள்ளார் ..நல்ல விடயம் ..முஸ்லிம் உணவகங்களில் சாப்பாட்டில் கருத்தடை மாத்திரை கலக்கிறார்கள் மருத்துவர் கருத்தடை செய்தார் என்று செய்திகள் வந்த போதெல்லாம் என் அறிவுக்கெட்டியவரை அவை சாத்தியமில்லை என பதிவு செய்திருந்தேன் ..
பின்னர் என் மருத்துவ நண்பர்களிடமும் அதைனை கேட்டு உறுதி செய்திருந்தேன் ..சாதாரண மக்கள் கடவுளுக்கு அடுத்ததாக அதிகம் நம்புவது மருத்துவர்களையே .அதுவும் சிகிச்சை என்று வந்து விட்டால் கடவுளை இரண்டாமிடத்துக்கு தள்ளிவிட்டு மருதுவர்களையே முழு முதல் கடவுளாக நம்புவார்கள் .உள்ளே ஒரு உறவுக்கு சத்திரசிகிச்சையோ .. குழந்தை பெற்றுக்கொள்ள மனைவியை அனுப்பிவிட்ட கணவனுக்கோ மருத்துவர் வெளியே வந்து சொல்கின்ற அந்த முதல் வார்த்தை தான் வேத வாக்கு ..எல்லாம் நல்லபடி முடிந்து விட்டது என்றதும் மனசார மருத்துவரை கை கூப்பி கும்பிடாதவன் உலகத்தில் எங்கும் கிடையாது
அதுவரை வாசலில் காத்துக்கிடக்கும் அனைவருக்குமே ஒவ்வொரு செக்கனும் செத்து விடலாமா என்று யோசிக்க தோன்றும் ..மனைவி சுகயீனமுற்றிருந்தபோது அதனை நானும் அனுபவித்திருக்கிறேன் ..அப்படியொரு தொழிலை செய்தவர் மீது பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கி சிறைக்கு தள்ளியிருந்தார்கள் .அதிகாரமும். இனவாத அரசியலும்.செய்திகளை முந்தி தருகிறோம் என்கிற பெயரில் கற்பனைகளை அள்ளித்தரும் ஊடகங்களும் அடுக்கடுக்காக வைத்த குற்ற சாட்டுகளை கூட அந்த மருத்துவர் பெரிதாக எடுத்திருக்க மாட்டார் என நம்புகிறேன் ..ஏனெனில் அவரின் மன சாட்சியின் படி அவர் தவறேதும் செய்திருக்கவில்லை ..ஊடகங்கள் எங்களை கொன்று விட்டார்கள் என்கிற அவரின் மனைவியின் செய்தியையும் படித்திருந்தேன் ..
ஆனால் ஒவ்வொரு உயிரையும் பத்திரமாக இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தி அதனை தாயின் கைகளில் கொடுத்த போது வலியை மறந்து சிரிக்கும் தாயை பார்த்து கடமையை செய்த திருப்தியோடு நகர்ந்துபோகும் அவர்மீது .பிள்ளைகளை பெற்று க்கொண்ட தாய் மார்களே புகார் கொடுத்தபோது நிச்சயமாக உடைந்து போயிருப்பார் .. அந்த தொழிலையே வெறுத்திருப்பார் ..அவர் சொத்து சேர்த்ததில் ஏதும் மோசடிகள் செய்திருந்தால் அதனை ஊழல் குற்றச்சாட்டில் விசாரித்திருக்கலாம் .
அவரின் மருத்துவ தொழிலில் பழி வாங்கியிருக்க கூடாது ..இப்போ அவர் மருத்துவ தொழிலில் எந்த குற்றமும்செய்யவில்லை என நிருபிக்கப் பட்டுள்ளது ஆனால் அவரும் அவரது குடும்பமும் அடைந்த மனவுளைச்சலை யாரால் தீர்த்து வைக்க முடியும் ..குற்றம் சாட்டிய அனைத்து குடும்பத்தினரும் தங்கள் பிள்ளைகளை பார்க்கும்போது மருத்துவர் ஷாபியின் முகமே அவர்களுக்கு தெரியும் ..ஏன் அவர்கள் வணங்கும் புத்தரின் சிலையில் கூட ..
ஆனாலும்.. ஒரு கடவுளை கொன்றுவிட்டார்கள் ..
A heart touching comment
ReplyDeleteEven the "BIRTH" we all leaving them to the hands of a DOCTOR. saving generations towards his wisdom & talent. May god save them.
ReplyDelete