Header Ads



Dr சாபிக்கு எதிராக, எவ்வித சாட்சியங்களும் கிடையாது - பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அறிவிப்பு

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சஹப்டீன் சாபீக்கு எதிராக எவ்வித சாட்சியங்களும் கிடையாது என குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

டொக்டர் சாபீ, சத்திரசிகிச்சை மூலம் சிங்கள பௌத்த தாய்மாருக்கு கருத்தடை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தமை மற்றும் சட்டவிரோத கருத்தடை சிகிச்சைகள் மேற்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மருத்துவர் சாபீக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், மருத்துவர் சாபீக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித சாட்சியங்களும் கிடையாது என புலனாய்வுப் பிரிவினர், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் அறிவித்துள்ளனர்.

குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சானி அபேசேகர இந்த விடயத்தை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் சாபீ பயங்கரவாத செயற்பாடுகளுடனோ அல்லது கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாகவோ சாட்சியங்கள் கிடையாது என தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இந்த செய்தி உண்மையாயின் டாக்டர் ஷாபிக்கு எதிரான நடவடிக்கை எடுத்த குருநாகல் உதவி பொலிஸ் மாஅதிபர், குருநாகல் போதனாவைத்தியசாலை டைரக்டர், உ.பொ.மாஅதிபரின் மனைவி,ரத்ன தாரே,திவய்ன பத்திரிகை ஆசிரியர் உற்பட அனைவருக்கு எதிராகவும் அரசாங்கம் வழக்குப் பதிவு செய்து உரிய பொருத்தமான மானநஷ்டஈட்டுத் தொகையை டாக்டர் ஷாபிக்கு நீதிமன்றம் மூலமாக பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த நியாயமான உரிமையைப் பெற்றுக் கொடுக்க அனைத்து முஸ்லிம் பா.உ.கள், மந்திரிமார்கள், நீதியையும் நியாயத்தையும் மதிக்கும்,பின்பற்றும் அத்தனை இயக்கங்களும் இந்த நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். இதற்காக இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தின் தலைமையில் சட்டத்தை மதிக்கும் அனைத்து இலங்கையர்களும் முன்வரவே்ணடும்.

    ReplyDelete
  2. அப்போ என்ன ம....க்கு சிறையில் வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

    ReplyDelete

Powered by Blogger.