Header Ads



சுதந்திரத்திற்கு பிறகு படுமோசமாக பழிவாங்கப்பட்ட, ஒரு இலங்கை பிரஜையாக Dr ஷாபி இருக்கிறார்

சட்ட விரோதமாக சொத்து சேர்த்ததாக அவரை கைது செய்து சிறை வைத்தார்கள்.

பிறகு அதற்கான எந்த ஆதாரங்களையும் கண்டு பிடிக்க முடியாமல் போனது.

கைது செய்து விட்டு குற்றச்சாட்டுகள் தேடப்பட்ட புதினமான சம்பவமாக உலக அளவில் இது பதிவானது!

தேசிய தெளஹீத் ஜமாஅத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்பு என குற்றஞ்சாட்டினார்கள்.

அதற்கும் எந்த முகாந்திரமும் இல்லையென TID கையை விரித்தது.

சிங்களப்பெண்களின் பலோப்பியன் குழாய்களை முடிச்சுப்போட்டு கருத்தடை செய்தாரென மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் கதையொன்றை சோடித்தார்கள்.

போலி முறைப்பாடுகளோடு வந்த எழுநூறுக்கும் அதிகமான பெண்கள் பலோப்பியன் பரிசோதனை என்றதும் பின்னங்கால்கள் பிருஷ்டங்களில் பட ஓட்டமெடுத்தார்கள்.

கடைசியாக நடந்த நீதிமன்ற அமர்வில் அவரைத்தடுத்து வைக்க தமக்கு எந்த தேவையுமில்லை, அவர் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை ஆதாரமற்றவை என CID பல நூறு பக்கங்களை கொண்ட அறிக்கையினை முன்னிலைப்படுத்தியது.

அவரை வெளியில் விட்டால் பொதுமக்களின் எதிர்ப்பு வலுக்கும் என்றும் ஒரு காரணத்தை சொல்லி குருநாகல் மஜிஸ்ட்ரேட் மேலும் 14 நாட்கள் தடுப்புக்காவலுக்கு உத்தரவிட்டார்.

கேகாலை சிறையொன்றில் அவரை அடைத்து வைத்துள்ளார்கள்.

சுதந்திரத்திற்கு பிறகு படு மோசமாக பழிவாங்கப்பட்ட ஒரு இலங்கை பிரஜையாக டொக்டர் ஷாபி இருக்கிறார்.

அவர் ஒரு ‘முஸ்லிம்’ என்பதற்காகவே இத்தனை நாடகங்களும் அரங்கேறுகின்றன.

தெய்வம் நின்று கொல்லும்.

Mujeeb Ibrahim

8 comments:

  1. Iwai anaitthum arasaankam pathil solliyaaha wendum....
    Manitha urimai enge?
    Manithaapimaanam enge?
    Kurotham...poraamay...pongiwittathu...

    ReplyDelete
  2. Dr. Shafi இக்கு நடந்த அநியாங்களுக்க்கு பரிகாரமாக அவருக்கு தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்தில் ஓர் அங்கத்துவம் வழங்கப்படவேண்டும். என்னுடைய இந்தப் பரிந்துரைக்கு அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. இவை அனைத்தும் இனவாதத்தின் உச்ச கட்டம்,டொக்டர் சாபியின் விடயம் இந்த உலகில் ஒவ்வொரு நாடுகலுக்கும்,ஒவ்வொரு சிவில்,சமூக அமைப்புக்கள்,ஜெனிவா மனித உரிமை தலைமையகம்,ஜரோப்பிய யூனியன்,அனைத்து இடங்களிலும் முறையிடப்பட வேண்டிய விடயம்.

    ReplyDelete
  4. ரிஷாட் அடுத்தமுறை இவருக்கு தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கி இவரை கெளரவபடுத்தினால் முழு முஸ்லிம் சமுதாயமும் சந்தோஷம்கொள்ளும்

    ReplyDelete
  5. Yes we have to Make Dr. Saafi Minister...

    ReplyDelete
  6. Why MP Portfolio for Dr. Shafie. First he has to live happily with his family. Then, he has to go outside the country for work abroad and live there for five years. This is the right solution for him.

    ReplyDelete
  7. Mr. Suhood: Dr. Shafi is next in the list of Kurunagal District to enter Parliament., and his service is needed here especially for our Muslim Community. If Dr. Shafi becomes MP, that’ll blacken the face of racists, and he can continue his service to our community.

    Have you ever asked any of 21 Muslim MPs, “why MP portfolio for them and what they have done for our Muslim Community upto now?? You seems like following the agenda of Racist . They also need Muslim Professionals out of Sri Lanka.

    ReplyDelete
  8. Shihabdeen's suggestion makes sense

    ReplyDelete

Powered by Blogger.