Header Ads



Dr ஷாபியின் மனைவி பதில் பொலிஸ்மா, அதிபரிடம் செய்துள்ள முறைப்பாடு

(எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான சிரேஷ்ட வைத்தியர் சேகு சிகாப்தீன் மொஹம்மட் ஷாபி விவகாரத்தின் பின்னணியில், அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரப்ண்டார உள்ளதாக சந்தேகிப்பதாகவும், அது தொடர்பில் உரிய விசாரணை ஒன்றினை முன்னெடுத்து நியாயத்தைப் பெற்றுத்தறும் கோரி பதில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் சேகு சிகாப்தீன் மொஹம்மட் ஷாபியின் மனைவியான, 42 வயதுடைய குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹம்மட் நஸீர் பாத்திமா இமாரா இந்த முறைப்பாட்டினை  பதிவு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

1 comment:

  1. அனைத்து விதமான நீதி பெறும் இடங்களிலும் நீதி கேளுங்கள்.UNO,Foreign governments,European union and jeniva human rights commission

    ReplyDelete

Powered by Blogger.