Dr ஷாபி மீது குற்றம்சுமத்திய எந்த பெண்ணும், மருத்துவப் பரிசோதனைக்கு வரவில்லை - சுகாதார அமைச்சு
மருத்துவர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபி மீது குற்றம் சுமத்தியுள்ள தாய்மாரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலை மற்றும் சொய்சா பெண்கள் வைத்தியசாலை ஆகியவற்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை எந்த தாய்மாரும் பரிசோதனைக்கு வரவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவப் பரிசோதனைக்கு நீண்ட நேரம் செல்லும் எனவும் பரிசோதனைக்கு வைத்தியசாலைகளில் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் பரிசோதனைக்கு எவரும் வரவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் மருத்துவர் ஷாபி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது என்பது இந்த மருத்துவப் பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்படும் என்பதால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட குற்றம் சுமத்தும் தரப்பினர், திட்டமிட்டு, தாய்மாரை இந்த பரிசோதனையை செய்துகொள்வதை தடுத்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இதுவரை தாம் மேற்கொண்டு வந்த பிரசாரம் புஷ்வாணமாகி விடும் என்பதால், பரிசோதனை நடவடிக்கைகளை திட்டமிட்டு தடுத்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொய்யை பணத்துக்காக சொல்ல முடியும்,எவ்வாறு நிருபிப்பார்கல்
ReplyDeleteDr Shafi இக்கு சார்பான இரண்டு பெண்களை ஆரம்பத்திலேயே இந்தக் கூட்டத்துக்குள் அனுப்பி இருந்தால் எல்லா சூழ்ச்சிகளையும் ஆதாரத்தோடு வெளிகொண்டுவந்திருக்கலாம்.
ReplyDelete