Header Ads



Dr ஷாபியின் அடிப்­படை உரிமை மீறல் மனு­வில், தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்

எத்­த­கைய கார­ண­மு­மின்றி பொலிஸார் தன்னைக் கைது செய்து, பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்­துள்­ள­மையால் தனது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனால் தன்னை உட­ன­டி­யாக விடு­விக்­கக்­கோரியும் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ வைத்­திய நிபுணர் மொஹம்மட் ஷாபி கடந்த 25 ஆம் திகதி அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்றை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்­துள்ளார்.

ஆப்தீன் அசோ­ஸியேட் சட்­டத்­த­ர­ணிகள் நிறு­வ­னத்தின் ஊடா­கவே மேற்­படி மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை செய்­துள்­ள­தாக தன் மீது போலிக்­குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளமை சட்­ட­வி­ரோ­த­மா­னது என்றும் சிங்­களப் பெண்­களை மகப்­பேற்­றுக்­கான அறுவைச் சிகிச்சை செய்யும் போது கர்ப்­பத்­தடை செய்­துள்­ள­தாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள முறைப்­பா­டு­களை நிரா­க­ரிப்பதாகவும் குறிப்­பிட்­டுள்ள அம்­ம­னுவில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

சாதா­ர­ண­மாக மேற்­படி அறுவைச் சிகிச்­சையின் போது, குறிப்­பிட்ட அறையில் ஆறு பேர்கள் கட­மையில் இருப்பர். விடுதி வைத்­தி­ய­தி­காரி, மேற்­பார்வை வைத்­தி­ய­தி­காரி, விடு­தியின் சிரேஷ்ட வைத்­தி­ய­தி­காரி, சிறுவர் நோயியல் மருத்­துவத் தாதி, சிறுவர் நோய் மருத்­துவ அதி­காரி, குடும்ப சுகா­தார மருத்­துவ தாதி ஆகிய ஆறு பேர்­க­ளுடன் சில சமயம் இதற்கு மேலும் உத­வி­யா­ளர்கள் இருப்பர். சிரேஷ்ட வைத்­திய நிபுணர் அறு­வைச்­சி­கிச்­சையில் ஈடு­படும் போது அவ்­வ­றை­யி­லுள்ள அனை­வரும் கண்­கா­ணித்துக் கொண்­டி­ருப்பர். எதிர்­பா­ராத ஆபத்­துகள் நிக­ழும்­போது தாயி­னதும் சேயி­னதும் உயிரைக் காப்­பாற்­று­வதில் இவர்கள் அனை­வரும் தம் அப­ரி­மி­த­மான பங்­க­ளிப்பைச் செய்வர்.

சாதா­ர­ண­மாக கருத்­தடை அறு­வை­யெனும் எல்.ஆர்.ரீ.சிகிச்சை மேற்­கொள்­ளும்­போது, மகப்­பேற்­றுக்­கான அறுவைச் சிகிச்­சைக்­கான நேரத்தை விடவும் 10–20 நிமிட நேரம் மேல­தி­க­மாக எடுக்கும். பெலோ­பியன் குழாயைத் துண்­டிப்­ப­தற்கு அல்­லது இறு­கக்­கட்­டு­வ­தற்கு (Clamping) சிசே­ரியன் சிகிச்­சை­யின்­போது பயன்­ப­டுத்தும் கரு­விக்குப் புறம்­பாக மேல­தி­க­மாக (Clamp) கரு­விகள் தேவைப்­ப­டு­கின்­றன. இவை மேல­தி­க­மாக வேண்­டப்­ப­டு­வ­தோடு இவற்றை மருத்­து­வத்­தா­தியால் மாத்­தி­ரமே அறுவைச் சிகிச்­சையில் ஈடு­படும் வைத்­தி­ய­ருக்கு கைய­ளிக்க முடியும். இதற்­காக அழைப்பு மணி எழுப்­பியே குறித்த தாதி­யிடம் மேற்­படி கருவி வர­வ­ழைக்கப் படு­கி­றது.

சாதா­ர­ண­மாக சிசே­ரியன் சிகிச்சைத் தொகு­தியில் இரண்டு (Clamp) கரு­வி­களே உள்­ளன. இவை­யி­ரண்­டையும் பொது­வாக தாதி அதி­கா­ரியே வைத்­தி­ருப்பார். அவை குறிப்­பிட்ட சிகிச்­சையில் ஈடு­படும் டாக்­ட­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வது குழந்தை பிர­ச­வித்­த­வு­ட­னேதான். காரணம் குழந்­தையின் தொப்புள் கொடியை அகற்­றவும் அதனை இறு­கக்­கட்டிக் கொள்­ள­வுமே அவை கைய­ளிக்­கப்­ப­டு­கின்­றன.

இதற்கு முன்னர் டாக்­ட­ருக்கு அக்­க­ரு­விகள் அவ­சி­யப்­ப­டு­வ­தாயின் அவர் முன்­ன­றி­வித்தல் கொடுக்கவேண்டும். சிசே­ரியன் சிகிச்சை, தாயின் அடி­வ­யிற்றைக் கீறு­வதன் மூலமே ஆரம்­பிக்கப்படு­கி­றது. அதனைத் தொடர்ந்து சிசுவின் தலைப்­பா­கமே முதலில் வெளியே எடுக்­கப்­ப­டு­கி­றது. அதன்­போது பெலோ­பியன் குழாய் மேலும் உள்ளே சென்று விடு­கி­றது. இச் சந்­தர்ப்­பத்தில் பொது­வாக பெலோ­பியன் குழாய் புலப்­ப­டாது போகி­றது. இந்­நி­லையில் எவர் கண்­க­ளுக்கும் தெரி­யாமல் பெலோ­பியன் குழாயை மேலே எடுத்து Clamp கரு­வியைப் பிர­யோ­கிக்க முடி­யாது. அவ்­வாறு செய்யும் போது யாரும் கண்­டு­கொள்வர்.

இந்த சந்­தர்ப்­பத்தில் யாரும் பெலோ­பியன் குழாயை நசுக்கி அதனைச் சிதை­வுறச் செய்­வாராயின் அப்­போது பெரிய குருதிப் பெருக்­கெ­டுக்கும். இந்­நி­லையில் பத்துத் தினங்­க­ளுக்குள் தாய் நோய்க்கு இலக்­காவார். இதனால் மீண்டும் சிகிச்­சைக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­க­வேண்­டிய நிலை உரு­வாகும். பெலோ­பியன் குழாய் நன்கு வழுக்கும் தன்மை கொண்­டது. அதனைக் கையுறை அணிந்த நிலையில் நசுக்­கு­வ­தென்­பது சாத்­தி­ய­மான தொன்­றல்ல. அவ்­வாறு செய்ய முனைந்­தாலும் கை வழுக்­கவே செய்யும்.
பெலோ­பியன் குழாயை நசுக்கி கர்ப்­பத்­தடை செய்­வ­தென்­பது வைத்­தி­யத்­துறை வர­லாற்­றிலே இல்­லா­த­தொன்­றாகும்.

சிசே­ரியன் செய்யும் போதோ அல்­லது செய்த பின்­னரோ தாய்மார் பாதிப்புக் குள்­ளா­ன­தாக முறைப்­பாட்­டா­ள­ருக்­கெ­தி­ராக இது­வ­ரையும் எத்­த­கைய முறைப்­பாடுகளும் இல்லை. அத்­துடன் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்றும் 69 மருத்­துவத் தாதிகள் முறைப்­பா­டு­க­ளுக்­கெ­தி­ராக குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­க­ளத்தின் முன் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர்.
பொது­வாக நரம்­பியல் நோய் வைத்­திய நிபு­ணரின் ஆலோ­ச­னைக்­க­மை­யவே சிசே­ரியன் சிகிச்சை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

நரம்­பியல் நோய் வைத்­திய நிபுணர் பேரா­சி­ரியர் ஹேமன்த சேனா­ரத்ன ‘டெய்­லி­மிரர்’ பத்­தி­ரி­கைக்கு கருத்துத் தெரி­விக்கும்போது, கர்ப்பத்தடை மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறு மிகவும் அரிதாக உள்ளதென்றே தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஷாபி நரம்பியல் வைத்திய நிபுணர் 9 பேருக்குக் கீழே பணியாற்றியுள்ள போதும் அவர்களில் எவரும் அவருக்கெதிராக எத்தகைய முறைப்பாடுகளும் தெரிவித்ததில்லை.

முறைப்பாடு சுமத்தப்பட்டுள்ளவரோடு சுமார் 200 சத்திர சிகிச்சைகளில் பங்களிப்புச் செய்துள்ள வைத்தியர்களில் ஒருவரான டாக்டர் ரத்னாயக்க மேற்படி முறைப்பாட்டை நிராகரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.