வைத்தியர் சாபிக்கு ஆதரவாக CID யினர் செயற்படுகின்றனர் - புரளியை கிளப்பும் ரதன தேரர்
(செ.தேன்மொழி)
குருணாகல் வைத்தியர் ஷெய்கு சியாப்தின் மொஹமட் சாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நடைப்பெற்று வருகின்ற விசாரணைகளில் குற்றப் புலனாய்வு பிரிவினர் அவருக்கு சாதகமாகவே நடந்துக் கொள்கின்றனர்.
நீதித்துறையும் ஒத்துழைப்பதாக குற்றச்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினதேரர் இன்று -23- செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடம் மகஜரொன்றை கையளிக்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
தன்னை சந்திப்பதற்கு ஜனாதிபதிக்கு நேரமில்லை என்று கூறியதாக , அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்த ரத்தின தேரர் மேலும் கூறியதாவது,
மருத்துவர் ஷாபியை காப்பாற்றும் செயற்பாடுகளிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினரும் , நீதிமன்றமும் செயற்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் எமக்கான நியாயத்தைப் பெற்றுக் கொள்ள நாங்கள் நியமித்த ஜனாதிபதியை சந்திக்க சென்ற போது அவருக்கு எங்களுடன் சந்திக்க நேரமில்லையாம்.அப்படி என்ன வேலையை செய்கின்றார் என்று எமக்கு புரியவில்லை.
ஜனாதிபதிக்கு முதுகெலும்பு காணப்படுவதாக கூறுகிறார். ஆம் கதிரையில் அமர்ந்திருக்கின்ற அழகிளே அவருக்கு முதுகெலும்பு இருப்பது உறுதியாகிறதே. ஆனால் இந்த நாட்டு தாய்மார்களின் கஷ்டம் தொடர்பில் அவருக்கு எந்தவித கவலையும் இல்லை.
பாதிக்கப்பட்ட 900 தாய்மார்கள் மருத்துவருக்கு எதிராக முன்வைத்துள்ள முறைபாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் எமக்கு திருப்தியில்லை, ஆகவேதான் இந்த விசாரணைகளை முறையாக மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு நியயத்தை பெற்றுக் கொடுக்குமாறு குறிப்பிட்டு மகஜர் ஒன்றை கையளிக்க வந்தோம் , அவர் அதை பொறுப் பேற்காததால் ஜனாதிபதி செயலகத்தின் நிர்வாக பிரிவின் பிரதானியிடம் அந்த மகஜரை கையளித்தோம்.எனத் தெரிவித்தார்.
Worlds No.01 most waste fellow this Rathne monk only.
ReplyDeleteஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ முதுகெலும்பு இருந்திருந்தால் ஒங்களையெல்லாம் இப்படி அநியாயமா ஒரு சமூகத்துக்கு எதிராக - அவசரகாலச் சட்டம் அமுலில் இரக்கும்போதே - நெனச்சபடி ஆட்டம்போட விட்டிருப்பாங்களா ?
ReplyDeleteஒளுங்கான ஆக்களா இருந்தா இன்னேரம் ஒங்களயெல்லாம் பின்னி எடுத்திருக்க மாட்டாங்களா !!!!!
Take him (Theror) metal hospital....
ReplyDeleteநீதித்துறை,புலனாய்வுத்துறை என்பன சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் தான் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கின்றன. ஆனால் நீங்கள் அதிவேகம். ஏன் இப்படி..
ReplyDeleteஇவருக்கு விரைவில் நீதி கிடைக்கும் அனைத்து தரப்பினரும் இனைந்து வழங்குவார்கள்.துல்லுர மாடுதான் பொதி சுமக்கும்.
ReplyDelete