Header Ads



ஒரு அபா­ய­க­ர­மான சூழ்­நி­லையை, முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்­கி­யுள்­ளது - சட்­டத்­த­ரணி பஹீஜ்

முஸ்லிம் சமூ­கத்தின் நல­னுக்­காக குரல் கொடுக்கும் அனை­வரும் சஹ்­ரான்­வா­தி­க­ளாக குறி­வைக்­கப்­பட்டு, அவர்­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்ற ஒரு அபா­ய­க­ர­மான சூழ்­நி­லையை முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்­கி­யுள்­ளது என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.எம்.பஹீஜ் தெரி­வித்தார்.

‘எதிர்­காலம்’ எனும் தலைப்­பி­லான கலந்­து­ரை­யாடல் ஒன்று அக்­க­ரைப்­பற்றில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், இன்று முஸ்லிம் சமூ­கத்­தி­னு­டைய  மத கலா­சார விட­யங்கள், பொரு­ளா­தாரம், கல்வி, பாது­காப்பு, காணி உரி­மைகள், நிர்­வாக அதி­கார எல்­லைகள் தொடர்பில் பேசு­கின்ற அனை­வரும் குறி­வைக்­கப்­பட்டு எல்லா வகை­யிலும் முஸ்­லிம்கள் எதி­ரி­யாக சித்­தி­ரிக்­கப்­ப­டு­கின்ற ஒரு அபா­ய­க­ர­மான சூழ்­நி­லையை முஸ்லிம் சமூகம் தற்­போது இலங்கையில் எதிர்­கொண்­டுள்­ளது.

தமிழ் சமூ­கத்தின் உரிமைப் போராட்­டத்­திற்­காக தமிழ் இயக்­கங்கள் ஆயு­த­மேந்தி போரா­டிய போது, தமிழ் சமூகம் பொது எதி­ரி­க­ளாகப் பார்க்­கப்­பட்டு பல்­வே­று­பட்ட சொல்­லொணா துய­ரங்­களை அனு­ப­வித்து வந்­தது. இன்று அந்த நிலை மாறி முஸ்லிம் சமூ­கத்தை குறி­வைத்து பொது எதி­ரி­க­ளாகப் பார்க்­கப்­படும் அபாயம் தோற்­றம்­பெற்று வரு­கின்­றது.

இலங்­கை­யு­டைய எதிர்­காலம் இன்று கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. சர்­வ­தேச சக்­திகள் மூலம் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வி­ருக்­கின்ற ஒரு சூழ்­நி­லையில், இலங்­கையில் வாழு­கின்ற முஸ்லிம் சமூகம் இன்று பொது எதி­ரி­யாக குறித்­துக்­காட்­டப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு முஸ்லிம் சமூ­கத்தை பொது எதி­ரி­யாக  அடை­யாளம் காட்டி அடக்கி ஒடுக்­கு­வ­தற்கு எத்­த­னிக்­கப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் காலம் தேர்தல் கால­மாக அமையப் போகின்­றது. இத்­தேர்­தல்­களில் முஸ்­லிம்­களின் அர­சியல் பலம் பரீட்­சிக்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றது. நாங்கள் சுயா­தீ­ன­மாக உரி­மைகள் சார்ந்து எங்­க­ளு­டைய முடி­வு­களை எடுக்கப் போகின்­றோமா? அல்­லது வன்­மு­றை­க­ளுக்கும், அடக்கு முறை­க­ளுக்கும் பயந்து நாங்கள் எங்­க­ளு­டைய முடி­வு­களை எடுக்கப் போகின்­றோமா? என்ற கேள்வி இருக்­கின்­றது.

இலங்­கையில் இருப்­பது முஸ்லிம் தனியார் சட்­ட­மாகும். அதனை சிலர் ஷரீஆ சட்­ட­மென விளக்­க­மில்­லாமல் கூறு­கின்­றனர். இந்த முஸ்லிம் சட்­ட­மா­னது 1800 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் இலங்­கையில் வாழ்ந்த முஸ்­லிம்கள் தங்­க­ளு­டைய விட­யங்­களை தீர்­மா­னித்துக் கொள்­வ­தற்­காக அவர்­க­ளுக்­கி­டையில் பயன்­ப­டுத்­திய வளர்ப்பு முறை­களில் அடிப்­ப­டை­யாக வைத்து தயா­ரிக்­கப்­பட்ட சட்­ட­மாகும். அதிலும் குறை­பா­டுகள் உள்­ளன. திருத்தங்கள் தேவைப்படுகின்றன. அது முழுமைபெற்ற சரியான சட்டம் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் சமூக, அரசியல், சட்ட ரீதியில் எங்களுடைய சமூகம் சார்ந்த ஏனைய செயற்பாடுகள் ஊடாக நாங்கள் உழைக்க வேண்டி இருக்கின்றது என்றார்.

vidivelli

No comments

Powered by Blogger.