Header Ads



நாட்டு மக்கள் எனக்கு, அதிகாரத்தை வழங்குவார்கள் என்றால்...

நாட்டு மக்கள் தனக்கு அதிகாரத்தை வழங்குவார்கள் என்றால், அடுத்த நாள் முதல் கமத்தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தின் நாவுல - அரங்கல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட விஜேரத்ன பண்டார கிராம வீடமைப்பு திட்டத்தை நேற்று மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச,

நாட்டில் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் கமத்தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை திட்டத்தை அமுல்படுத்தவில்லை.

பிரேமதாச பரம்பரையினர் வலது காலை முன்னால் எடுத்து வைத்தால், மீண்டும் பின்நோக்கி வைப்பதில்லை.

நான் தற்போது வலது காலை முன்னோக்கி வைத்துள்ளேன். பிரேமதாசவினர் வலது காலை முன்னோக்கி வைத்தால், எந்த காரணத்திற்காகவும் அதனை பின்நோக்கி வைக்க மாட்டார்கள்.

அதுதான் எங்கள் பழக்கம். மக்கள் எடுக்கும் எந்த தீர்மானமாக இருந்தாலும் அதனை ஏற்க நான் தயாராக இருக்கின்றேன்.

பெரிய பெயர்களை கூறினாலும் நான் அவற்றுக்கு பயப்பட போவதில்லை. நான் தரையில் இருக்கின்றேன். சிறிய மனிதர்களுடன் இருக்கின்றேன். சாதாரண மக்களுடன் இருக்கின்றேன்.

இதனால், அனைவரும் இணைந்து ரணசிங்க பிரேமதாசவின் அபிவிருத்தி யுகத்தை மீண்டும் ஏற்படுத்துவார்கள் என நம்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.