Header Ads



இஸ்லாமிய தண்டனை முறை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கம், இனியும் சர்ச்சை கிளப்பி அர்த்தமில்லை

இஸ்லாமிய பாடப்புத்தகங்களில் கூறப்பட்டுள்ள தண்டனைகளை முஸ்லிம் நாடுகள் கூட கைவிட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய தண்டனை முறைகள் தொடர்பான பாடம் நீக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் இதனை சர்ச்சைக்குரியதாக முன்னெடுக்க முடியாதென விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் இஸ்லாமிய தண்டனைகளை நிறைவேற்ற முடியாது என்றும் இங்கு அவ்வாறு ஒரு போதும் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டது கிடையாது என்றும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க மற்றும் வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஜெயந்த விக்கிரமநாயக்க ஆகியோர் சாட்சியமளித்தனர். இதன் போது கருத்து வெளியிடுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த தெரிவுக்குழு விசாரணையில் இஸ்லாமிய பாடப்புத்தகங்களில் மதம்மாறியவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என கூறப்பட்டுள்ளதாக அளிக்கப்பட்ட சாட்சியம் தொடர்பில் இவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களது சாட்சியங்களின் இடைநடுவில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய ரவூப் ஹக்கீம் எம்.பி மேலும் கூறியதாவது,

2016 ஆம் ஆண்டின் பின்னர் குற்றமும் தண்டனையும் பாடம் ஏன் பாடப்புத்தகத்திலிருந்து அகற்றப்பட்டது என்பது தொடர்பில் ஆசிரியர் குழு தெளிவுபடுத்தியுள்ளது. இஸ்லாம் மார்க்கத்தை அரசாங்க மார்க்கமாக பின்பற்றும் நாடுகளில் சிலவற்றில் மாத்திரமே பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகள் அமுல் படுத்தப்பட்டது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை (ஐ.சி.சி.பீ.ஆர் ) ஏற்ற முஸ்லிம் நாடுகளும் இந்த தண்டனைகளை கைவிட்டுள்ளன. ஒருசில நாடுகளில் மாத்திரம் தான் இவ்வாறு தண்டனை வழங்கப்படுகிறது.காலத்துக்கு காலம் மாறும் சட்டங்களுக்கு அமைய பல நாடுகள் இவ்வாறு தண்டனை வழங்குவதை கைவிட்டுள்ளன.முஸ்லிமல்லாத நாட்டில் இந்த தண்டனை பொருத்தமற்றது என்பதால் அதனை பாடப்புத்தகத்திலிருந்து அகற்ற ஆசிரியர் குழு முடிவு செய்துள்ளது.இந்த விடயத்தை சர்ச்சைக்குரிய விடயமாக இனியும் தொடர முடியாது.தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சாட்சியமளிக்க வந்த ஒருவர் முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் குற்றம் சுமத்தி சென்றார்.இங்கு இந்த தண்டனைகள் அமுல்படுத்தப்படுவதாக அவர் காண்பிக்க முயன்றார். இங்கு ஒருபோதும் இவ்வாறான தண்டனை அமுல்படுத்தப்பட்டது கிடையாது.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

2 comments:

  1. இஸ்லாமிய பாடப்புத்தகத்தில் இருந்து இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் மற்றும் அதன் தண்டனைகள் விளக்கம் சொல்லும் முறைகள் அகற்ற கூடாது.முஸ்லிமல்லாதவர்களின் வேண்டுதலின் பேரில் எங்களின் உரிமைகளை இழக்க முடியாது எங்களின் முன்னோர்கள் உரிமைகளுக்காக போராடி அவற்றை பெற்று பாதுகாத்து வந்தார்கள் ஆனால் இப்போது ஒவ்வொன்றாக இழக்கின்றோம்.இஸ்லாமிய சட்டங்கள் தெரிந்து வைக்கவேண்டும் ஆனால் அவற்றை முஸ்லிம்கள் பெரும்பான்மை இல்லாத நாடுகளில் அமுல் செய்யமுடியாது அவற்றை வேண்டுமென்றால் பாடசாலை புத்தகத்தில் குறிப்பிட வேண்டும்.

    ReplyDelete
  2. IZU ORU PURAMIRUKKA, PALA MUSLIM NAADUHALIL THADAI SHEIYAPATTA, PIRIVINAIVAZI,WAHABI KOLHAI ULLA,
    IBN THAIMIA, MOUDOODI, PONRAWARHALIN SHEIZIHAL, PAADAPUTHAHANGALIL IRUNDU
    AHATRAPPADA VENDUM.
    THAYAVUSHEIZU, MAANAVARHALAI,
    THATKOLAI JAMATHITKU THOONDAZIRHAL.

    ReplyDelete

Powered by Blogger.