Header Ads



பயங்­க­ர­வாத தாக்­கு­தலினால் முஸ்­லிம்­க­ளுக்கே, பல்­வேறு பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்ளன - சம்­பிக

பயங்­க­ர­வாத தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­வர்­களால் உள்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்குப் பல்­வேறு பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டன. இவர்­க­ளுக்கு பாதுகாக்க இந்த பயங்­க­ர­வா­திகள் முன்­வ­ரப்­போ­வ­தில்லை என்று பெரு­நகர் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக ரண­வக்க தெரி­வித்தார்.

சிலா­பத்தில் நடை­பெற்ற ‘தேசிய வழி’ நிகழ்ச்­சியில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இதனைத் தெரி­வித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் தெரி­வித்­தா­வது :

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்று மூன்று மாதங்கள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் அத­னுடன் தொடர்­பு­டைய குழுவில் ஒரு பகு­தி­யினர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இன்­னொரு பகு­தி­யினர் அழிக்­கப்­பட்­டுள்­ளனர். எனினும் அவர்கள் நாட்டில் ஏற்­ப­டுத்திச் சென்ற அழிவை மறந்­து­விட முடி­யாது. இதில் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் தொடர்­பு­பட்­டுள்­ளனர். அவர்­களில் பலர் இன்று சுதந்­தி­ர­மாக வெளியில் உலாவிக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­ப­தையும் நாம் மறக்­க­வில்லை.

பயங்­க­ர­வாத தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­வர்­களால் உள்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு பல்­வேறு பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டன. இவர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க இந்த பயங்­க­ர­வா­த­வா­திகள் முன்­வ­ரப்­போ­வ­தில்லை.

சிரியா, லிபியா, ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடு­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டு­க­ளுக்கும் இலங்­கை­யி­லுள்ள கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் என்ன தொடர்பு இருக்­கி­றது என்று எமக்குப் புரி­ய­வில்லை. அவற்றைக் காரணம் காட்டி எமது நாட்டு கிறிஸ்­த­வர்­களை பழி­வாங்­கி­ய­தையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இஸ்­லா­மிய கட­வுளைத் தவிர வேறு எந்த கடவுள் உண்­மை­யா­னவர் அல்ல. இஸ்­லாத்தைத் தவிர வேறு மதங்­களை பின்­பற்­று­ப­வர்­களைத் தவிர ஏனைய மதத்­த­வர்கள் வாழக்­கூ­டாது என்­பதே இந்த இஸ்லாமிய அடிப்­ப­டை­வா­தி­களின் எண்­ண­மாகும்.

இன்று அர­சி­யல்­வா­திகள், புல­னாய்­வுப்­பி­ரிவு மற்றும் பாது­காப்புப் பிரிவு ஆகி­ய­வற்­றுக்­கி­டையில் பாரிய இடை­வெளி காணப்­ப­டு­கின்­றது. இந்த பயங்­க­ர­வா­தத்தை முற்­றாக ஒழிப்­ப­தற்கு இந்த மூன்று துறை­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். இதுவே காலத்தின் தேவை­யாக உள்­ளது.

ஆயு­தங்கள், நிதி உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களில் மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை அனை­வரும் ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுப்­பார்கள் என்று எதிர்­பார்க்­கின்றோம். இந்­நி­லையில் பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு நன்றி தெரி­விக்க விரும்­பு­கின்றேன். மிகக் குறு­கிய காலத்­திற்குள் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களை கைது செய்­த­து மாத்­தி­ர­மின்றி அவர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை பாது­காப்­புத்­துறை துரி­த­மாக முன்­னெ­டுத்­துள்­ளது.

அதே­போன்று குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்புடைய ஏனைய குற்றவாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வாறான அடிப்படைவாத தாக்குதல்களை முற்றாக ஒழிப்பதற்கு அடிப்படைவாதிகளை ஒழிப்பதால் மாத்திரம் தீர்வுகாண முடியாது. அவர்களது எண்ணங்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1 comment:

Powered by Blogger.