தூக்கு தண்டனையை அமுல்படுத்துவதில், எந்த தவறும் இல்லை - சஜித்
சிறைச்சாலைக்குள் இருக்கு கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் மிகப் பெரிய போதைப் பொருள் குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சட்டத்திற்கு முன் நீதிமன்ற செயற்பாடுகளில் எந்த சந்தேகங்களும் இன்றி சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தூக்கு தண்டனையை அமுல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 44 இலட்சமான பாடசாலை பிள்ளைகளின் வாழ்க்கையை முற்றாக அழிக்கும் இந்த போதைப்பொருள் வியாபாரிகளிடம் இருந்து எதிர்கால சந்ததியை எப்படி காப்பாற்றுவது என மரண தண்டனைக்கு எதிராக பேசுவோரிடம் கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கெஸ்பேவயில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் புதிய விதமான பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள், அதற்கு உதவியாளர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதையும் இவர்கள் எதிர்க்கின்றனர்.
நாட்டை பிளவுப்படுத்த முயற்சித்த விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரை நடத்திய போது, அன்று ஆட்சியில் இருந்த அரசாங்கம், பயங்கரவாதிகளை அழிக்க வேண்டாம் என முப்படையினருக்கு ஆலோசனை வழங்கியதா என நான் கேள்வி எழுப்புகிறேன். அப்படியான ஆலோசனை வழங்கியிருந்தால், புலிகளின் பயங்கரவாதம் இன்று வரை தொடரும் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
சக்கிலியனுக்கு குசு ஒரு நாத்தமா
ReplyDelete