சீன சிகரட் இறக்குமதி செய்யப்பட்டால் நானும், ஜனாதிபதியும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மாட்டோம்
போதைப்பொருள் பாவனையினை தீவிரப்படுத்தும் விதமாக சீன சிகரட்டுக்களை இறக்குமதி செய்தால் தானும், ஜனாதிபதியும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மாட்டோம்.
போதைப் பொருள் ஒழிப்பு உள்ளிட்ட பிரதான விடயங்களே ஆட்சி மாற்றத்தின் மேடைப்பேச்சாக காணப்பட்டது.வகுக்கப்பட்ட கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு செல்லும் போது முரண்பாடுகளே ஏற்படும் என சுகாதார துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் மாநாடு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போதைப்பொருள் ஒழிப்பிற்கு எதிரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த அரசாங்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகபதவி வகித்த வேளையில் இருந்து உலக சுகாதார தாபனத்துடன் இணைந்து செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.புகைத்தல் ஒழிப்பு தொடர்பில் உலக சுகாதார தாபனம் 22 கொள்கை திட்டங்களை வகுத்துள்ளது. இதில் 20 கொள்கைகளை இதுவரையில் முழுமைப்படுத்தியுள்ளோம்.
கடந்த அரசாங்கத்தில் போதைப்பொருள் ஒழிப்பிற்கு எதிராக சுகாதார அமைச்சர் முன்னெடுத்து சென்ற புதிய செயற்திட்டங்களுக்கு அரசாங்கம் எவ்வித ஒத்துழைப்பினையும் வழங்கவில்லை. மாறாக புகைத்தல் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமையவே செயற்பட்டு சுகாதார அமைச்சரை நெருக்கடிக்குள்ளாக்கியது. ஆனால் தற்போது அந்நிலைமை காணப்படவில்லை.
புகைத்தல் பாவனையே போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆரம்ப தளத்தினை இடும். தேசிய வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் விதத்தில் சீன சிகரட்டை இறக்குமதி செய்யும யோசனை நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்டது . இலாபத்திற்காக மக்களின் எதிர்காலத்தை இல்லாதொழிக்க முடியாது. சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் வரும் சிகரட்டுக்களை சட்ட ரீதியில் இறக்குமதி செய்வதால் என்ன பாதிப்பு என்பதே நிதியமைச்சரின் வாதமாகும்.
எதிர்ப்பபுக்களின் மத்தியில் இரகசியமாக சீன சிகரட் இறக்குமதி செய்யப்பட்டால் தானும், ஜனாதிபதியும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மாட்டோம் என்றார்.
This fellow Rajitha Seneratne is the most "CUNNING" political "FOX" in our country. Rajitha is already planning to become a "NATIONAL LIST" MP in the next government to be elected in 2020. After making use of the UNF government of Ramil, he knows that he will have NO chance with Ranil any more after critizizing the present government still enjoying the "MEDIA SPOKEMANASHIP" and also the Ministry of Health and Indiginous Medicine. Rajitha is using the "CHINESE CIGARETTES" isuue as a way of getting closer to Maithripala Sirisena. Rajitha has "NO" political party or even a 10 member vote bank. So Rajitha is laying the foundation to join the "SLFP NEW ALLIANCE" when general elections are formed to join that alliance through one of his NGO groups. Then he will clain a "NATIONAL LIST" MP post from Maithripala Sirisena. Rajitha may also crawl to the SLPP to get a "NATIONAL LIST" MP in the news government to be formed. Rajitha Seneratne is the "DEVIL and SATAN" of democratic politics in Sri Lanka. Political parties and Alliances should be very carefull about his political Hoodwinking games/moves.
ReplyDeleteNoor Nizam.
Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".