Header Ads



ரணிலுக்கு கடிதம், அனுப்பியுள்ள ஜம்­இய்யதுல் உலமா

முஸ்லிம் விவாகம், விவாக ரத்துச் சட்டம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­திப்பதற்கு அகில இலங்கை ஜம்­இய்யதுல் உலமா கோரிக்கை விடுத்துள்­ளது.

இது­கு­றித்த கடிதம் நேற்­றைய தினம் உலமா சபை­யினால் பிர­த­ம­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­வித்த உலமா சபையின் பொதுச் செய­லாளர் முபாரக் மௌலவி, முஸ்லிம் தனியார் சட்டம் குறித்து இரு அறிக்­கைகள் நீதி அமைச்­ச­ரிடம் நாம் சமர்ப்­பித்­துள்ளோம்.

இதன்­போது, முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்தம் மேற்­கொள்­ளும்­போது உல­மாக்­களின் வழி­காட்­ட­லு­ட­னேயே முன்­னெ­டுக்­கப்­படும் என முஸ்லிம் எம்.பி.க்கள் தெரி­வித்­தி­ருந்­தனர். எனினும் தற்­போது அவ­ச­ரப்­பட்டு குறித்த சட்டத் திருத்­தத்தை மேற்­கொள்­கின்­றனர்.

குறித்த திருத்­தத்­தின்­போது வய­தெல்லை ஒரு பிரச்­சி­னையே கிடை­யாது. சிறு வயது திரு­ம­ணங்கள் இப்­போது இடம்­பெ­று­வ­தில்லை. அதற்கு நாம் எந்த ஆட்­சே­ப­னை­யையும் தெரி­விக்­க­வில்லை. எனினும், திரு­மணப் பதி­வின்­போது பெண் ஒப்­ப­மிட்­டால்தான் நிகாஹ் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­மென அறிக்­கை­யொன்றில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. அது இஸ்­லா­மிய ஷரீ­ஆ­வுக்கு முரண் என்­பதை நாம் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறோம். அது மட்­டு­மல்­லாது, திரு­ம­ணத்­தின்­போது பெண்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டா­த­வ­கையில் இந்­திய முஸ்லிம் தனியார் சட்­டத்தில் இருக்கும் ஏற்­பா­டுபோல் நாமும் ஒரு யோச­னையை முன்­வைத்­தி­ருக்­கிறோம். அது குறித்து கவனம் செலுத்­தப்­பட வேண்டும். இவ்­வாறு ஒரு­சில விட­யங்கள் பேச வேண்­டி­யி­ருக்­கி­றது. இதற்கமைய உலமாசபையுடன் பேச்சுவார்த்தைக்கு அவகாசம் தருமாறு கோரிக்கை விடுத்து நேற்றைய தினம் நாம் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.

(எஸ்.என்.எம்.ஸுஹைல்)

7 comments:

  1. ENGADA MP, MARHAL, RANILAI
    PAAZUKAAKVUM,
    YEHUDI NASARANIHALAI,
    SHANDOSHAPPADUTHI, AWARHAL
    PIRAYOSHANAM, PETRUKKOLLAUM
    KURANIL ULLA SHATTANGALAI
    MAATRUHIRAARHAL.
    ISLATHAI, ALLAH PAAZUHAPPANAHA.

    ReplyDelete
  2. இஸ்லாமிய ஷரீஆ மணப்பெண் ஒப்பமிடலை தடுக்காத போது, அது எப்படி ஷரீஆ வுக்கு முரணாக அமையும்.
    அதற்கப்பால் மணப்பெண்ணின் அனுமதி தேவை என்பதை குறிப்பிடும் தெளிவான ஆதாரங்கள் இருக்கும் போது ஒப்பமிடல் கட்டாயமானதாகவும் ஆகலாம்.
    உலமா சபை சிந்திக்காவிடினும், அரசியல் தலைவர்கள் சிந்தித்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
  3. Mr shukry..விளக்கம் இல்லாமல் குழப்ப வேண்டாம். ..அனுமதி உண்டு என்பது வேறு கட்டாயமாக்குவது என்பது வேறு. Eg.எந்த நாளிலும் எந்த நேரத்திலும் திருமணம் செய்யலாம்.ஷரியா அதனை தடுக்கவில்லை அதட்காக குறிப்பிட்ட ஒரு நாளில் திருமணம் செய்தால் மட்டுமே திருமணம் செல்லுபடியாகும் என்று கூறினால்( அதாவது கட்டாயமாக்கினால் ) அது மடத்தனம்.

    ReplyDelete
  4. வயதெல்லை பிரச்சினை அல்ல என்று உலமா? சபை குறிப்பிடுவது நகைப்புக்குரியது. இவர்கள்தான் நீதி அமைச்சு வேண்டிக் கொண்ட முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தின் போது, முஸ்லிம் பெண்களின் ஆகக் குறைந்த திருமண வயதை 16 ஆக ஆக்குவதற்கு கொண்டுவந்த யோசனையை முன்வைக்க தடையாக இருந்தவர்கள்.
    இன்று அது 18 ஆக மாறப்போகின்றது.

    ReplyDelete
  5. சகோதரரே முஸ்லிம் தனியார் சட்ட வரைவு ஆரம்ப அக் காலத்தில் அது மார்க்கத்துக்கு முரணானது, என்று கூறி அதற்கெதிராக அன்றிருந்த உலமா எனப்படும் பலர் பேராடினர். இந்த வரலாற்றை வாசித்துப் பாருங்கள்.
    அல்-குர்ஆன் ஒன்று திரட்டப்பட்ட வரலாற்றிலும். அபூபக்கர் ரலி பயந்தார்கள். ஆனாலும் அது காலத்தின் கட்டாயம் என உணர்ந்த அவர்கள் அதனை நடைமுறைப்படுத்தினார்கள்.
    அது போன்று தான் இந்த கையொப்ப விடயமும் அமுல்படுத்த வேண்டிய ஒன்று தான்.
    இதன் மூலம் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் தவிர்க்கப்படவும், இஸ்லாம் பற்றிய நல்ல அபிப்பிராயத்துக்கு காரணமாக அமையும்.

    ReplyDelete
  6. Bro shukry..இங்கு விடயம் கருத்து வேறுபாடு உண்டா இல்லையா என்பதல்ல... மற்றவர்களின் நல்லெண்ணத்திட்காக மார்க்கத்தை மாற்ற முடியாது.மார்க்கத்தில் இல்லாத பெண்ணுடைய ஒப்பம் என்ற ஒரு விடயத்தை திருமணம் செல்லுபடியாகும் நிபந்தனையாக கட்டாயமாக்க முடியாது.

    ReplyDelete
  7. நான் அறிந்த வகையில் இமாம் மாலிக் ரஹ் அவர்களின் கருத்துப்படி மணப்பெண்ணின் கையொப்பம் அவசியமாகும், என்ற ஒரு ஷரத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள்.
    திருமணம் செல்லுபடியாவதற்கு வலீ கூட அவசியம் இல்லை என்ற நிலைப்பாடும் இருக்கும் போது, நீங்கள் சொல்லும் கையொப்பம் கட்டாயம் என்ற விடயம் இஸ்லாத்தில் கட்டாயமானது அல்லதான். அது மாத்திரமன்றி ஷரீஆ வின் மேலெழுந்த வாசிப்பில் திருமணப் பதிவே அவசியம் இல்லை தான். என்றாலும் நாம் நாட்டின் சட்டத்திற்கு பிறக்கும் குழந்தைகளின் எதிர்கால தேவைகளுக்காக மட்டுமன்றி தம்பதிகளிடையே பிரிவினைகள் ஏற்பட்டால் சலுகைகளை பெற்றுக் கொடுக்க... என்றெல்லாம் பல தேவைகள் காரணமாக அதனை நாம் கட்டாயமான ஒன்று போல் செய்கின்றோம்.
    அதே நேரம் பெண் அவளின் அனுமதி பெறப்படும் வரையில் திருமணம் செய்து கொடுக்கப்பட மாட்டாள் என்று வருகின்ற ஹதீஸின் படியும், பெண் பலவந்தமாக திருமணம் முடித்துக் கொடுத்தல் மற்றும் பெண் தரப்பில் இருந்து வரும் அத்தகைய குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்ளவும் என்ற நடைமுறைகளின் தேவை காரணமாக அதை சட்டத்தில் கட்டாயமாக்கள் காலத்தினதும், சமூக நலன் அடிப்படையிலும் தவிர்க்க முடியாதது என்றே கருதுகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.