பித்தலாட்டக்காரன் ஞானசாரவை நம்பி, ஏமாந்த கல்முனைத் தமிழர்கள்
30 நாட்களைக் கடந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரர், தன்னை நம்பிய தமிழர்களை நட்டாற்றில் இறக்கிவிட்டார் என்ற ஆதங்கம் கல்முனை வாழ் தமிழ் மக்களிடையே எழ தொடங்கி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை உரிய முறையில் அனைத்து அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக தரம் உயர்த்தி தர கோரி ஐவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.
தங்களது கோரிக்கைகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வரும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என களத்தில் குதித்தனர்.
இந்த விடயம் அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாய் அமைந்தது. இந்த போராட்ட களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர்களான மனோ கணேசன், தயா கமகே ஆகியோர் நேரடியாக வருகை தந்தனர்.
மூன்று மாத காலத்திற்குள் பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்படும் என்ற பிரதமரின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாசிக்க தொடங்கிய போது அவர் கூச்சலிட்டு வெளியேற்றப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட அமைச்சர்களின் வருகையை குழப்புவதற்காக ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்ட ஒரு சிலரின் நிகழ்ச்சி நிரல்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர்கள் அல்லது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களின் அரசியலை பட்டை தீட்டி கொள்வதற்காக போராட்டகளத்திற்கு வந்து நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
இதனையடுத்து ஆறாம் நாள் போராட்ட களத்திற்கு விரைந்த கலகொட அத்தே ஞானசார தேரர் 30 நாட்களுக்குள் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை சகல வித அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக மாற்றித் தருவேன் இல்லையேல் 31ஆம் நாள் எனது தலைமையில் போராட்டம் தொடரும் என்றார்.
இந்த நிலையில் இன்று 31ஆவது நாள் கடந்துள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வமான அறிக்கையை வாசித்த சுமந்திரன், அமைச்சர்கள் உட்பட கல்முனை தமிழர்கள், சிங்களப் பேரினவாத சக்தியின் ஒட்டு மொத்த உருவமாக இருக்கும் ஞானசாரரின் வெறும் வாய்வார்த்தையை மாத்திரம் வைத்து போராட்டத்தை கைவிட்டார்கள்.
விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொண்டேயாக வேண்டிய ஒரே ஒரு விடயம், தமிழர்களின்பிரச்சினை சார்ந்து சிங்கள பேரினவாதிகளோ, சிங்கள சக்திகளோடு துணை நின்ற குழுக்களோ தமிழர்களின் தீர்வு விடயத்தில் சற்று விலகி நிற்கவே பார்க்கின்றது.
இதுவே நிதர்சனம். ஞானசார தேரரின் கதையைக் கேட்டு உண்ணாவிரதத்தை விட்டவர்கள் இன்று சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். Tm
ஞானசாராவை நம்பியதற்காக மட்டுமல்ல மற்றைய சிங்கள இனவாதிகளை நம்பியதற்காகவும் தமிழர்கள் கவலைப்படும் காலம் ஒரு நாள் வரும். அது வெகு தொலைவில் இல்லை
ReplyDeleteநாங்கள் உண்ணாவிரதம் எனும் நாடகம் ஆரம்பிக்கும் போதே சொன்னோம்.இப்போது அவர்கள் கிழக்கு தமிழருக்கு நல்ல அல்வா தந்து விட்டார்.இன்னும் இன்னும் பல அல்வாக்கல் கிடைக்கும் வெகு விரைவில்.
ReplyDeleteசைத்தான் இந்த உலகிலும் குறிப்பாக மறுமையிலும் மக்களை இலகுவாக ஏமாற்றிவிடுவான்.அந்த உண்மையில் நம்பிக்கை வைத்துள்ள மக்கள் யாரும் இந்த ஒருஜினல் சைத்தானின் சிறிய அசைவைக்கூட பொருட்படுத்தமாட்டார்கள்.
ReplyDeleteஏன் தம்பி ரிசாத் ஞானம் கொடுத்த அல்வா நெய்ல வறுத்ததா இல்லாட்டி நல்லெண்ணையில் வறுத்ததா. விபரம் உடனடியாகத் தேவை.
ReplyDelete