Header Ads



ஹிஸ்புல்லாவுக்கு கிடைத்த பணம் தொடர்பாக, விசாரணை நடத்த மத்திய வங்கிக்கு அதிகாரம் இல்லை

மட்டக்களப்பு கெம்பஸ் நிறுவனம் மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர், கிடைத்த பணம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய வங்கிக்கு அதிகாரம் இல்லை என்பது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று -26- தெரியவந்துள்ளது.

தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலாவணி திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.ஆர். ஜயவர்தன, புதிய அந்நிய செலாவணி சட்டமூலத்திற்கு அமைய 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் கிடைத்த நிதி சம்பந்தமாக விசாரணை நடத்த முடியாது எனக் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு அந்நிய செலாவணி சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்வதற்கு முன்னர் பெட்டிகலோ கெம்பஸ் நிறுவனத்திற்கான சகல நிதியும் கிடைத்துள்ளது.

சட்டமூலம் திருத்தப்பட்ட பின்னர் அந்த நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து பணம் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், புதிய திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அதற்கு முன்னர் கிடைத்த பணம் சம்பந்தமான விசாரணை நடத்த மத்திய வங்கிக்கு அதிகாரம் இல்லை என்பதை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவும் பணம் கிடைத்த ஹீரா நிதியத்தின் பிரதானிகளும் அறிந்திருந்தனர் என்பது தெளிவாகியுள்ளது.

இது குறித்து தெரிவுக்குழுவின் உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ நேரடியாக கேள்வி எழுப்பினார், இதற்கு பதிலளித்த மத்திய வங்கியின் அந்நிய செலாவணி திணைக்களத்தின் பணிப்பாளர் ஜயரத்ன, ஆம் என நேரடியாக பதிலத்தார்.

இது புதிய சட்டமூலத்தில் உள்ள ஒரு பலவீனம் எனவும் அதனை திருத்த வேண்டும் என்பதை தான் தனிப்பட்ட ரீதியில் உணர்வதாகவும் ஆர்.ஆர். ஜயரத்ன குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.