Header Ads



ஷாபி விவகாரத்தில், ரதன தேரரை சந்திக்க மறுத்த ஜனாதிபதி


மருத்துவர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபி சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்றை கையளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்டோர் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.

எனினும் ஜனாதிபதியை சந்திக்க தமக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துரலியே ரதன தேரர், நீதிக்கான தாய்மார் அமைப்பு, குடும்ப கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் தாய்மார் சார்பில் ஆஜராகி வரும் சட்டத்தரணிகள் இன்று மதியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க, ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்தனர்.

மருத்துவர் சிஹாப்தீன் ஷாபியினால், குடும்ப கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்குமாறு கோரி, ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவே அவர்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்தனர்.

எனினும் ஜனாதிபதியை சந்திக்கவில்லை எனவும் ஜனாதிபதியின் பணிக்குழுவின் பிரதான அதிகாரியிடம் மகஜரை கையளித்தாக ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தான் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் தாய்மார் செய்துள்ள முறைப்பாடு தொடர்பான வழக்கு பற்றிய அக்கறை இருப்பதாகவும் இந்த அநீதியை யாரிடம் முறையிடுவது எனவும் ரதன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2 comments:

  1. ஓஹ் . . . .ஓநாய் அழுகிறது

    ReplyDelete
  2. முறைப்பாடு செய்த தாய்மார் ஏன் பரிசோதனைக்கு வர மறுப்பது.அப்படியானால் ஆதாரம் இல்லாமல் எவர் மீதும் பழி போட முடியுமா.ஒருவரின் மீது குற்றம் சுமத்துபவர்கல் அதை நிரூபிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.