சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிராக, வவுனியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
திருமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விஹாரை ஒன்றை நிர்மாணிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் மீது சுடு நீர்த்தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் உட்பட சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
வடக்கு, கிழக்கில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் பௌத்த மதத்துக்கு முதன்மையான இடத்தை ஆதரித்த பின்னர் சிவனேசன், ஸ்ரீதரன், யோகேஸ்வரன் ஆகியோர் ஏன் கன்னியாவுக்கு சென்றார்கள்?, அவர்கள் எம்.பி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும், ரணில் தமிழர் தாயகத்தில் விஹாரை கட்டுவதை நிறுத்து, சிங்கள பௌத்த மத பயங்கரவாத்தை நிறுத்து, தமிழர்களுக்கு அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி தேவை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தியவாறும் அமெரிக்க ஐயேராப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
என்னடா இது இவ்வளவு விரைவாக இவர்களின் மாமா,மச்சான் உறவு விரிசாலாகிவிட்டது 😃😃😮
ReplyDeleteஉங்கட உருப்படாத ஆர்பாட்டதால் ஒரு மசிறும் பிடுங்க முடியாது. இன்று ஒரு சிறு ஆரம்பத்தை தான் மீண்டும் சிங்களவன் காட்டியுள்ளான். இன்னும் சில வருடங்கள் கடக்க அனைத்தும் மாறும்.
ReplyDeleteWeldone. We, Muslims, do not make fun over Hindhus' suffering eventhough some Tamils write hurtful comments. Mainly, in SL, our mother tongue is Tamil. Besides, our Rasool never taught us this kind of ridicules.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete