Header Ads



என் நிலைப்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை - திட்டவட்டமாக மீண்டும் அறிவித்தார் ஹரீஸ்

- அன்ஸிர் -


முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்கும், இருப்புக்கும், இனவாத அச்சுறுத்தல்களுக்கும் இதுவரை ஜனாதிபதியிடமிருந்தோ, அல்லது பிரதமரிடமிருந்தோ எழுத்து மூலமான எந்த உத்தரவாதமும் கிடைக்காத நிலையில், எப்படி மீண்டும் ராஜாங்க அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பது என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கேள்வியெழுப்பினார்.

அவர் இதுபற்றி மேலும் கூறுகையில்,

அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, கல்முனை விவகாரம், தோப்பூர் விவகாரம், வாழைச்சேனை விவகாரம் என முஸ்லிம்களின் இடர்பாடுகளின் பட்டியல் நீண்டு செல்கிறது.

இவை குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகள் ஆர்வமற்று உள்ளனர். 

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் என்னிடம் இதுபற்றி தினமும் முறையிடுகிறார்கள். தமது பிரதேசங்களுக்கு வரும்படி அழைப்பு விடுகிறார்கள்.

முஸ்லிம்களின் பிரச்சினைகள் வியாப்பகம் பெற்றுள்ள நிலையில், நான் எந்த முகத்துடன் அமைச்சுப் பதவியை மீள் ஏற்பது..? 

அந்தவகையில் நான் மீண்டும் அமைச்சு பதவியை மீள் ஏற்கமாட்டேன். 

இதில் எந்த மாற்றமும் இல்லை. விரும்பியவர்கள் அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ளட்டும். சமூகத்தின் நலன்கருதி நான் மேற்கொண்ட தீர்மானமானத்திற்கு, முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு நல்குமென எதிர்பார்க்கிறேன் என்றார்.

2 comments:

  1. சிறந்த முடிவு,ஜனநாயக போராட்டம்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆனால் பெளசி ஹாஜியாருக்கு பொருமை இல்லியே! அவர் சாவப்பாக்ராரு!

    ReplyDelete

Powered by Blogger.