பயந்து நடுங்க நீங்கள் கடவுள் இல்லை; வெறும் அமைச்சர்தான் - பதிலடி கொடுத்த ஒவைசி - ஆடிப்போன அமித்ஷா
பயந்து நடுங்குவதற்கு அமித்ஷா ஒன்றும் கடவுள் இல்லை என்று இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஜூலை 15ம் தேதியன்று தேசியப் புலனாய்வு முகமை(NIA) திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் சொல்லப்பட்டிருகும் திருத்தங்கள், மாநிலப் பட்டியலில் இருக்கும் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை மத்திய அரசு தன் கையில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்நிலையில், இந்த மசோதாவின் மீது இன்று -17- நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார்.
முன்னதாக தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) குறித்து அசாதுதீன் ஒவைசி பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ தற்போது என்.ஐ.ஏ-க்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் தேசியப் புலனாய்வு முகமை திருத்த மசோதா கொண்டுவருவதன் அவசியம் என்ன, மேலும் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு தற்போது என்ன தேவை ஏற்பட்டுள்ளது” என கேள்வியெழுப்பினார்.
மேலும், “ அமெரிக்காவையும், இஸ்ரேலையும் ஒப்பிட்டு இந்தியாவை பார்க்கக்கூடாது, இந்தியாவின் நிலை என்பது வேறானது” என அவர் குறிப்பிட்டார்.
Post a Comment