Header Ads



சிங்கள ராவய கலைக்கப்பட்டுள்ளது, என்ன காரணம் தெரியுமா..?

களுத்துறை மாவட்டத்தில் இருந்து அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியும் என மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்திருந்த கருத்து காரணமாக சிங்கள ராவய அமைப்பில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சிங்கள ராவய அமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவரான அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்துள்ளார்.

மாகல்கந்தே சுதத்த தேரர், சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளராக கடமையாற்றி வருகிறார்.

அண்மையில், அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த தானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சுதத்த தேரர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியும் என கூறியிருந்தார்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவை மனதில் வைத்தே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சியினரை ஆதரித்து வரும் சிங்கள ராவய அமைப்பிற்குள் சுதத்த தேரரின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கள ராவய அமைப்பு, கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இறைவன் நின்ரு கொல்லுவான்

    ReplyDelete

Powered by Blogger.