வஹாபி - சலபிகளின் வியாபாரங்களை இனம்கண்டு, அவற்றை புறக்கணிக்க வேண்டும் - ஞானசார தேரர்
பிக்குகளுக்கு புத்தர் வழங்கிய பொறுப்பு..?
நாட்டிற்கு அரசன் இல்லாதபோது அரசனை உருவாக்கியவர்கள் பிக்குகளாகிய நாம். அடுத்தது நாம் இந்த நாடு பெளத்த மதத்தால் போசிக்கப்பட்டுள்ளது என்று நம்புகிறோம். இந்த பூமி பெளத்த மதத்திற்காக அரசர்களால் பல சந்தர்ப்பங்களில் பூஜை செய்யப்பட்டது. அதனால் பெளத்த மதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்போது, சிங்கள இனத்திற்கு வரலாற்று ரீதியாக இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக பேசாமல் எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
எங்கிருந்து இந்த வேலையை ஆரம்பிப்பீர்கள்..?
இந்தப் பிரச்சினையை கலந்தாலோசனை செய்ய தேசிய மட்டத்தில் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதனை மக்களுக்காக திறக்க வேண்டும். முஸ்லிம், தமிழ், சிங்கள சமூகத்திலுள்ள பிரச்சினைகள் அங்கு முறையிடப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் உள்ள இந்தப் பிரிவினைக்கு காரணிகள் என்ன? அனைவரும் வந்து அந்த ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்க முடியும். இதனை செய்யாமல் இருப்பதால் மென்மேலும் பிரிவினை அதிகரித்து, தேவையில்லாத வகையில் மக்கள் பல முகாம்களாக பிரிவர்.
நீங்கள் சொல்லும் விடயம், சிங்கள சமூகத்திற்குள் மாத்திரமே நீங்கள் பேசுகிறீர்கள் இல்லையா..? இவ்வாறானதொரு பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்றால் தமிழ் , முஸ்லிம் ஆகிய சமூகங்களுடன் நல்லதொரு கலந்தாலோசனையை ஆரம்பிக்க வேண்டிய தேவை இருக்கிறது தானே..?
இது நீங்கள் வெளிப்படையாக காணும் விடயம். உங்களுக்கு தெரியுமா..? நாம் எவ்வளவு முஸ்லிம் மக்களுடன் பேசுகிறோம் என்று? எவ்வளவு தமிழ் மக்களுடன் பேசுகின்றோம் என்று? நாம் கட்டாயமாக அவர்களுடனான கலந்தாலோசனையை உள்ளக ரீதியில் செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால் நாம் அரசியல் செய்வதில்லை என்பதால் அவர்களின் பெயரை இவ்விடத்தில் நாம் கூறுவதில்லை.
வஹாபிஸத்திற்கு எதிரான சூபி முஸ்லிம்கள் இந்த தீவிரவாதத்திற்கு எதிராக எழுந்து வந்தனர். காத்தான்குடி, பேருவளை, மாதம்பே, சிலாபம், காலி, வெலிகம போன்ற பிரதேசங்களில் சூபிக்கள் இந்த தீவிரவாதத்திற்கு எதிராக பேச பயத்தில் வாயை மூடி இருக்கின்றனர். காரணம் வஹாபிஸ அடிப்படைவாதத்திற்கு அனைத்து அரசியல்வாதிகளும் கட்டுப்பட்டுள்ளனர். நாம் அவ்வாறு செய்வதில்லை. நாம் அவ்வாறான மக்களை அழிப்பதில்லை. வெளிப்படுத்தவும் மாட்டோம். ஆனால் நாம் இரகசியமாக மிகவும் சிறந்த முறையில் இந்த பிரச்சினையை தீர்க்க கலந்தாலோசனைகளில் ஈடுபடுகிறோம்.
சிங்கள சமூகத்திற்கு, சிங்கள தனித்துவத்திற்கு நகர முடியும் என்றால் , தமிழர் தமது தனித்துவத்தை பாதுகாக்க முடியும் என்றால், முஸ்லிம் சமூகம் அவர்களுக்கு உரிமை உள்ள அவர்களின் தனித்துவத்தை நோக்கி நகர்வதில் தவறு என்ன..?
நீங்கள் தேவையற்ற பைத்தியக்கார கதை ஒன்றை சொல்கிறீர். இந்த நாடு யாருடையது? இந்த நாட்டின் வரலாற்றை அமைத்தவர்கள் யார்? இந்த நாகரிகத்தை கட்டி எழுப்பியவர்கள் யார்? இந்தக் கதையை ஐரோப்பாவுக்கு சென்று கதைக்க முடியுமா? ஜப்பானில் கதைக்க முடியுமா? இது என்ன கதை?
உலகில் எந்தவொரு நாட்டிற்கும் “குடிமகனுக்கு உரிய” என்று சில உரிமைகள் உள்ளன. மேலும் நாட்டின் “தேசத்திற்கு உரிய” உரிமைகள் என்று இரண்டு வகை உள்ளன. எமக்கு தவறிய இடம் இதுதான். இதில் குடிமகன் யார் என்று புரிந்து கொள்ளவில்லை. வரலாற்று புகழ்மிக்க தேசிய இனம் யார் என்பதை புரிந்து கொள்ளவும் இல்லை. சிங்களவனின் தனித்துவத்தை பாதுகாக்கவில்லை என்றால் அதை சவூதிக்கு சென்று செய்ய முடியுமா? மத்திய கிழக்கிற்கு சென்று செய்ய முடியுமா?
எமக்கென்று ஒரு மொழி இருக்கிறது. எமக்கென்று ஒரு கலாசாரம் இருக்கிறது. எமக்கென்று தனித்துவம் ஒன்று இருக்கிறது. இன்று எமது எத்தனை பேர் மத்தியகிழக்கில் இருக்கின்றனர். அவர்கள் அங்கு இலங்கை கொலனி அமைக்கப் போவதில்லை. அங்குள்ள சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கின்றனர். பிறந்தது இந்த நாட்டில் என்றால் ஏன் இரண்டு நாடுகளில் காலை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இந்த நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டுமே. இந்த நாட்டின் கலாசாரத்திற்கு நகர வேண்டுமே.
தற்பொழுது நடைபெறுவது இந்த எல்லையற்ற சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதும், சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தாமையாகும். தலைக்கவசம் அணியாமல் செல்லும்போது முதலாவது நாளிலே தண்டனை வழங்கினால் அந்த சட்டத்தை தொடர்ந்து பின்பற்றுவர். ஒரு தொல்பொருள் உள்ள இடத்தை கைப்பற்றும்போது சட்டத்தை அமுல்படுத்தினால் அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டிருப்பர். தற்பொழுது அரசியல்வாதிகள் சட்டத்தை அசைத்துக் கொண்டிருக்கின்றனர். சட்டத்தை சரியாக செய்ய விடுவதில்லை. இவ்வாறான சூழலில் தான் தேவையற்ற மோதல்கள் உருவாகின்றன.
சிங்களம் மற்றும் தமிழ் மக்களுக்கிடையில் வரலாறு நெடுகிலும் பிரிவினை காணப்பட்டாலும் சிங்களம் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் அண்மைக்காலம் வரை நெருங்கிய நட்பு காணப்பட்டது. இந்த நட்பு இவ்வாறு தகர்த்தெறியப்பட இடமளிப்பது அல்லது அதற்கு யாராவது காரணமாக இருப்பது பெரிய தவறு இல்லையா..?
சஹ்ரான்கள் வெடித்தது இன்று நேற்று என்றாலும், இதனுடைய ஆரம்பம் எழுபதுகளில், எண்பதுகளில் இடம்பெற்றது. உலகளாவிய ரீதியில் இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று மாத்திரம் இல்லை, இஸ்லாத்துடைய கதையைப் பார்த்தால், இஸ்லாம் தொடர்பாக எழுதப்பட்டுள்ள விடயங்கள், விசேடமாக மேற்கு ஐரோப்பாவில், முஸ்லிம்களாக இருந்து, இஸ்லாத்தை பின்பற்றி, அதனை உயர் கல்வியில் கற்றவர்கள் கூட இன்று அதனை விமர்சனம் செய்கின்றனர். அவர்களுடைய எழுத்துக்களை பார்க்கும்போது எந்தவொரு சமூகத்திலும் முஸ்லிம் சமூகம் 2% ஐ விட அதிகரிக்கும் பொழுது , 5% ஐ அதிகரிக்கும் பொழுது 7% ஐ அதிகரிக்கும் பொழுது, இவ்வாறு 50% ஐ அதிகரிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்று கணக்குப் பார்த்துள்ளனர். அதற்கு உலகில் வேண்டியளவு சான்றுகள் உள்ளன. 10% ஐ அதிகரிக்கும் பொழுது அவர்கள் தமது தீவிரவாதத்தை, பிரிவினைவாதத்தைக் கொண்டு வருகின்றனர். அது புதிய விடயம் இல்லை. உலகிலுள்ள ஏனைய நாடுகளுக்கு நடந்த விடயம் அதுதான்.
தற்பொழுது இந்தப் பிரச்சினை இங்கிலாந்தில் இல்லையா..? அவுஸ்திரேலியாவில் இல்லையா..? அந்த அனைத்து நாடுகளிலுமே இந்தப் பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. எந்தவொரு நிலையிலும் இவற்றைக் கவனிக்காது எம்மால் செயற்பட முடியாது.
இதற்கு தீர்வு, சிங்கள மக்களின் சனத்தொகை அதிகரிப்பில் கவனம் செலுத்துவது, சிங்கள தாய்மார்கள் அதிகமான பிள்ளைகளை பெற வேண்டும் என்ற கருத்து மக்கள் மயப்படுத்தப்படுகிறது. அந்த கருத்துடன் நீங்கள் உடன்படுகிறீரா..? அது தீர்வு என்று நினைக்கிறீரா..?
நாம் பிறப்புக் கட்டுப்பாடு பற்றிப் பேச வேண்டியது முஸ்லிம் பிரச்சினை காரணமாக இல்லை. நாட்டிலுள்ள வளங்களை நினைத்து. நாட்டில் நீர் வளம் குறைவு. இடம் குறைவு. வளிமண்டலத்திற்கு ஒரு எல்லை இருக்கிறது. எமக்குள்ள அனைத்து இயற்கை வளங்களும் மட்டுப்படுத்தப்பட்டவை.
ஒரு இனத்தை அதிகரிக்கச் சொல்லவும், இன்னொரு இனத்தை அழிக்கும்படி எம்மால் சொல்ல முடியாது. அது நல்ல முறையும் இல்லை. இது எமக்கு மாத்திரம் இல்லை, முழு உலகுக்கும் உள்ள பிரச்சினை. அதனால் நாம் இயற்கை வளங்களை கவனத்தில் கொண்டு இதற்காக நாம் என்ன செய்ய முடியும் என்று உரையாடலை ஆரம்பிக்க வேண்டும்.
முஸ்லிம் வியாபாரத்தைப் புறக்கணிப்புச் செய்ய வேண்டும் என்ற கருத்து சிங்கள சமூகத்தில் பரவுகிறது. அந்த கருத்துடன் உடன்படுகிறீரா..?
இந்த குண்டு வெடிப்பின் காரணமாக அடிக்க வேண்டிய இடங்களுக்கு இல்லை அடிக்கப்படுகிறது. அப்பாவி வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். பாதையில் வடை விற்கும் வியாபாரி பாதிக்கப்பட்டார். இது அநியாயம் ஆகும்.
நாம் வியாபாரத்தை புறக்கணிப்பு செய்வதென்றால் ஒட்டுமொத்த முஸ்லிம்களை புறக்கணிப்பு செய்ய கூடாது. நாம் வஹ்ஹாபி, சலபிகளின் வியாபாரம் எவை என்று இனம் காண வேண்டும். அவற்றை இனம் கண்டு புறக்கணிப்பு செய்து பாரம்பரிய சுதேச முஸ்லிம் மக்களை நாம் பாதுகாக்க வேண்டும்.
தற்பொழுது தனித்தனியாக நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. எம்மால் அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம். அதனால்தான் நான் கூறினேன் தேசிய வேலைத் திட்டம் இல்லை என்றால் எல்லாம் குழப்பமடைகின்றன. அவ்வாறு நடக்கும் பொழுது தேவை இல்லாத பாதையில் இது செல்லும்.
உங்களுக்கு ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைத்தது சிறையில் அவர் உங்களைச் சந்தித்து நடந்த உரையாடலின் பிறகுதானே? எவ்வாறான உடன்பாடுக்கு இரு தரப்பினருக்கும் வர முடிந்தது?
ஒரு உடன்பாடும் இல்லை. ஜனாதிபதி என்னைச் சந்தித்த பொழுது நான் இஸ்லாம் பிரச்சினையை பற்றிய அதிகமான தகவல்களை சொன்னேன். நாம் நினைக்கும் இடத்தில் இல்லை இந்த பிரச்சினை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினேன்.
நான் நினைக்கிறேன் அவர் இந்த பிக்கு வெளியே வந்தால் இந்த பிரச்சினையை தீர்க்க ஏதாவது செய்வார் என்று சிந்தித்திருப்பார். அந்தப் பொறுப்பை சுமந்து தான் நான் செயற்படுகிறேன். அவ்வாறு இல்லாமல் எந்தவொரு நிபந்தனையும், எந்தவொரு அரசியலும் அவர் என்னுடன் பேசவில்லை.
நேர்காணல்: ஷீ லால் செனெவிரத்ன தமிழில்: -சப்ராஸ் சம்சுதீன்
இந்த காபிர் முனாபிக்குக்கு இந்த நாட்டில் எதுவேண்டுமானாலும்பேசலாம், எழுதலாம், சிங்கள இனத்தை முஸ்லிம், தமிழ் இனத்துக்கு எதிராக தூண்டிவிடலாம், இனங்களுக்கு இடையில் முறிவு ஏற்படுத்தும்செயல்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கலாம். சகவாழ்வும், நல்லிணக்கமும் இந்த காபிர் நாய்க்கு பொறுந்தாது. இந்த நாட்டின் சட்டம் எப்போது எல்லோருக்கும் ஒரே சட்டமாக இயங்கும்?
ReplyDeleteநாட்டுக்கு பொருளாதாரத்தில் மிகப் பெரும் பங்களிப்பும்,யுத்த நேரத்தில் Muslim நாடுகலினூடாக அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கி இந்த நாட்டுக்காக பாடுபட்ட Muslim ளின் மயிரை இன்னும் புடுங்கி கொண்டிருக்கிரீர்கல்.சஹ்ரான் எனும் மன நோயாளியும் அவனுடன் இனாந்து ஒரு 100 பேரும் செய்த பயங்கரவாதத்துக்காக.ஆனால் 30 வருட கொடூரத்தை மறந்து விட்டீர்கள்.ஆனால் கத்தி,வாள்கலுடன் ஆரம்பித்த ஆவா எனும் குழுவை அடக்க கூட முடியவில்லை.ஆனால் நேற்று குண்டுத் தாக்குதல் நடத்தியிருக்கிறது அந்த கும்பல்.எனவே நீங்கள் Muslim களின் மயிரை பிடுங்கும் போதே அந்த ஆவா கும்பல் ஆயுத கும்பலாக மாறப் போகிறது,அப்போது புரியும் உங்களுக்கு Muslim களின் அருமை.
ReplyDeletePls be patient.Allah will help us always.not to worry.Nabi (sal)period his family given trouble torture hate speech maximum they gave hard time.but
ReplyDeleteIn our country only very few monks group soughting.dontpanic brothers.We are Always success with patient