மஹா பராக்கிரமபாகு மன்னர், பொலன்நறுவையில் கப்பல்களில் ஏறி, திருகோணமலையில் இருந்து புறப்பட்டு நாடுகளை பிடித்தார்
பண்டைய காலத்தில் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து பொலன்நறுவைக்கு கப்பல்கள் வந்த காலம் ஒன்று இருந்ததாகவும் இலங்கையின் அந்த பண்டையகால தொழிநுட்பத்தை முந்தி செல்ல உலகிற்கு இன்னும் முடியாமல் போயுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இளையோர் நிபுணத்துவம் என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய அதி நவீன தொழிநுட்ப உலகில், ஆயிரம், ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் காணப்பட்ட பண்டைய தொழிநுட்பத்தை தாண்டி எம்மால் செல்ல முடியவில்லை. பொலன்நறுவை நகருக்கு அருகில் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து கப்பல் வந்த காலம் இருந்தது.
மஹா பராக்கிரமபாகு மன்னர், பொலன்நறுவையில் கப்பல்களில் ஏறி, திருகோணமலையில் இருந்து புறப்பட்டு நாடுகளை பிடித்தார்.
பழைய நீர்பாசன தொழிநுட்பம், விவசாய தொழிற்நுட்பம், தொல் பொருள் தொழிநுட்பம் பற்றி நாம் பேசுகிறோம். உலகம் இதுவரை இந்த தொழிநுட்பங்களில் நம்மை முந்தி செல்லவில்லை என்பது குறித்து இலங்கையர்கள் என்ற வகையில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
Wow what a technology
ReplyDeleteCheck your brain
ReplyDeleteEntha nado? Theriuma thambi?
ReplyDeleteதொழில் நுட்பத்தின் அதீத உச்ச வளர்ச்சியான இந்த 21ம் நூற்றாண்டில்
ReplyDelete1. சீன ஜனாதிபதி தலைமையில் குய்சோவில் ஐநூறு மீட்டர் துளை கொண்ட பூ கோள தொலைநோக்கி கட்டுமானம் முன்னெடுக்கின்றனர் .
2. வட கொரியா ஜனாதிபதி தலைமையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனை
3. அமெரிக்க ஜனாதிபதி தலைமையில் செவாய் கிரகத்தில் பயிச்செய்கை
இலங்கை ஜனாதிபதி -????பழைய கதைகள் (மன்னன் வந்த மயிர் புடுங்கின )
நம்முட நாடு உருப்படும்
இந்த பேய்கி பேன் பார்த்த பேயனுக்கிட்ட நாட்ட குடுத்தா , இப்பிடித்தான் பேசுவான் !
ReplyDeleteவிதான !
வரலாற்று காலங்களில் சிங்களவர்கள் மத்தியில் சிறந்த இராசதந்தரிகள் இருந்ததாலேயே இன்றுவரை நிலைத்திருக்கிறார்கள். சோழர்களுக்கு எதிராக நிரந்தரமாக பாண்டியனோடும் அவ்வப்போது பாண்டியர் சேரர்களோடும் கூடணியாக இருந்தனர். பாண்டிய அரசுரிமைப்போரில் தமிழகத்தில் தரை இறங்கி மதுரைவரை முன்னோறி இறுதியில் தோற்கடிக்கபட்டுள்ளனர். றுகுண சோழர்களால் கைபற்ற முடியாத சிங்களவரது கோட்டையாக எப்பவும் இருந்தது. சிங்களவர் நீர் மேலாண்மை தொழில்நுட்பம் மிக சிறப்பானது. உலக பொறியியல் அற்புதமான காவிரியில் கரிகாலன் கட்டிய கல்லணையில் சிங்கள போர்கைதிகளும் பணியாற்றி இருக்கிறார்கள். இனவாதம் பிரச்சினையென்றபோதும் சிங்களவர்கள் நீண்ட வரலாற்றுப் பெருமை உள்ள இனம் என்பதில் ஐயமில்லை.
ReplyDeleteபெரிய பீத்தல் மட்டும்தான்.இன்று இலங்கையை முந்திச்செல்ல யாரும் இல்லை. ஏன்டா உங்களுக்குப்பின்னால் யாருமே இல்லை.
ReplyDelete