தூக்குத் தண்டனை குறித்து, வெளியாகியுள்ள தகவல்கள்
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச எதிர்ப்புக்களையும் மீறி நாட்டில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டும் என பிடிவாதமாக உள்ளார். இருப்பினும் மைத்திரியின் இவ்வாறான எண்ணம் நிறைவேற்றப்படுமாயின் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என பிரிட்டன் உட்பட ஏனைய நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது தொடர்பான மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு இன்னமும் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை எனத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
எனினும், மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் மைத்திரி கையெழுத்திட்ட ஆணை எதுவும், நீதியமைச்சுக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று நீதியமைச்சின் செயலர் ஆர்.எம்.டி.பி. மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆணையில் தான் கை ஒப்பமிட்டு விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதியினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
எனினும், தூக்குத்தண்டனையை நிறைவேற்றுபவர் பணிக்கு இன்னமும் எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, அலுகோசு பணிக்கு இரண்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டுள்ளன எனினும் அவ்வாறு இதுவரை நியமிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நம் மூதாதையர்களை தூக்கிலிட்டும் ஏனையமுறைகளிலும் கொலை செய்து நம்நாட்டு பொக்கிசங்களை களவு எடுத்து நம் நாட்டை மதசிந்தனையால் பிளவுபடுத்தி நாசமாக்கிவிட்டுச்சென்ற இந்த மேக்கதிய உலக மஹாகள்ளர்களின் அழுத்திட்கு நாம் அடிபனிய வேண்டிய தேவையே இல்லை
ReplyDeleteஅப்படி அவன்களுடைய சிந்தனைக்கு நாம் கட்டுப்பட்டால் நம் நாட்டு வாழிப்களையும் மக்களையும் பெரும் ஆபத்திலிருந்து காப்பற்றவே முடியாது மரண தண்டனை என்பது அது ஒரு கொலையல்ல மாற்றமாக அது ஒரு சமூகபாதுப்பு பயிருடன் வளரும் கெட்ட நஞ்சுபுட்களை களலைந்தெடுப்பதாகும்
இந்த மேட்கத்திய நாடுகள் இலங்கை போன்ற மூன்றாம் உலநாடுகள் எவ்வகையிலும் முன்னேற்றம் காணமலும் அந்த நாடுகளில் இனப்பிரச்சிகளை உருவாக்க வேண்டும் அல்லது சமூகத்தை நாசமாக்கும் இந்த ஹெரோயின் போதைப்பொருள்கள் வியாபாரிகளை உருவாக்கி அந்த சமூகங்களை போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்களாக உருவாக்கி அந்து எப்போதும் முன்னேற்றம் அடைந்து நம் நாடுகளுடன் போட்டி நிலைமைக்கு வரக்கூடாது என்பதுதான் இந்த கள்ளர்களின் திட்டம்
நம் நாடும் நம் நாட்டுமக்களும் போதைப்பொருள்களால் நாசமாகிவிட்டால் இவன்களுக்கு என்ன நஸ்டம்?
ஆனால் இதே சட்டம் தரம் பார்க்காமல் அனைவருக்கும் நிலைநாட்டப்படவேண்டும் இதை நம் நாட்டு பொறுப்புதாரிகள் கவனம் செலுத்துவார்களா????