ஜனாதிபதி தேர்தலில் யார் போட்டியிடுவது, என தீர்மானிப்பது எனது பணி கிடையாது - சஜித்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் போட்டியிடுவது என்பதனை தீர்மானிப்பது தமது பணி கிடையாது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை இன்று -22- சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும். அது எனது பொறுப்பல்ல. எனது அரசியல் பயணத்திற்கு பௌத்த மதத்தை ஓர் பாலமாக பயன்படுத்திக் கொள்ள மாட்டேன்.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களையும் நான் பாதுகாப்பேன். எனது தலையில் ஜனாதிபதி தேர்தல் பற்றிய எண்ணங்கள் கிடையாது.
1125 விஹாரைகள் அமைக்க வேண்டும், ஆயிரம் தஹாம் பாடசாலைகள் அமைக்க வேண்டும், 17500 வீடுகள் நிர்மானிக்க வேண்டும் என்பனவே எனது இலக்காக அமைந்துள்ளது.
நான் இது பற்றியே சிந்தித்து செயற்படுகின்றேன், ஜனாதிபதி தேர்தல் பற்றி ஏனையவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள முடியும்.
எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்களுக்கு சேவையாற்றத் தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Post a Comment