முஸ்லிம் மாணவிகளின் முன், பன்றி இறைச்சியை உண்ணச்சொன்ன ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை
கொழும்பு, கல்கிஸ்ஸ பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முஸ்லிம் மாணவிகளின் முன்னிலையில் பன்றி இறைச்சியை உண்ணுமாறு ஏனைய மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரிகைக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
அமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவின் முறைப்பாட்டுக்கு அமைய கல்வி அமைச்சு இந்த விசாரணையை முன்னெடுக்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் ஆசிரியர்கள் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் மீது பல்வேறு வகையான அடக்கு முறைகள் அழுத்தங்கள் பிரயோக்கிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான ஆசிரியர்களால் முழு ஆசிரியர்களுக்குமே அவமானம்
ReplyDeleteThanks Harsha. You are one of the heroes who boldly voice against racism in this country.
ReplyDelete