தலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரியவை நிறுத்துமாறு அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் யோசனை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஓரளவுக்கு சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள கரு ஜயசூரிய விரும்பவில்லை என்பதால், அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரிய போட்டியிடலாம் எனவும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிடலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் வகிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை வழங்கினால், மட்டுமே சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என அவரது தரப்பினர் கூறியுள்ளனர்.
,
ReplyDeleteகருவைவிட சஜீத்தான் சிறந்த தெரிவு..
ReplyDelete