Header Ads



மஹிந்த மனதார விரும்பினால், ஜனாதிபதித் வேட்பாளராகப் போட்டியிடுவேன் - சமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மனதார விரும்பினால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவேன் என முன்னாள் சபாநாயகரும், மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

'ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ச இருக்க வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.

அதேவேளை, பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டிலும் மாற்றம் இல்லை' என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் சமல் ராஜபக்சவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

முப்பது வருடப் பயங்கரவாத யுத்தத்திலிருந்து இந்த நாட்டை மீட்டெடுத்ததிலும், நாட்டை மீளக் கட்டியெழுப்பியதிலும் ராஜபக்ச குடும்பத்துக்கு முக்கிய பங்குண்டு.

ராஜபக்ச குடும்பத்தில் உள்ள அனைவரும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு முழுத் தகுதியுடையவர்கள்.

எனவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மனதார விரும்பினால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அப்ப கோத்தபாய மயிர் புடுங்கய்யா இலங்கை வாரார் !

    ReplyDelete

Powered by Blogger.