ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை, களமிறக்குவதில் எந்த முரண்பாடுமில்லை - ஹரின்
(நா.தினுஷா)
ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை களமிறக்குவதில் எந்த முரண்பாடும் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இந்த விடயத்தில் நாங்கள் தீர்க்கமாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் எந்த முரண்பாடும் கிடையாது. கட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் உப தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் தகராறுகள் எதுவும் ஏற்படவில்லை.
அமைச்சர் ரவி கருணாநாயக்க சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அதற்கு எங்களின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் முறையான பதிலை முன்வைத்தார். அத்துடன் அந்தப் பிரச்சினை முடிவடைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று -23 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார்.
வேறே தலைவர்களே இல்லையா ,
ReplyDelete