சுதந்திர கட்சியின் பக்கம் சாய்கிறார் குமார வெல்கம
சிறிலங்கா சுதந்திர கட்சி மீண்டும் சரியான பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியை வெற்றிபெற செய்வதற்கு தனது முழு ஆதரவையும் வழங்குவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொலன்னாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
சிறிலங்கா சுதந்திர கட்சி என்பது மிகவும் சிறந்த கட்சியாகும். எனவே அந்த கட்சியை யாரும் அழிக்க முடியாது. நான் பொதுஜன பெரமுன கட்சியை ஆரம்பிப்பதற்கு பாடுபட்டிருந்தேன்.
எனினும், நான் அந்த கட்சியின் உறுப்பினராக செயற்படவில்லை. நான் சுதந்திர கட்சியை சேர்ந்தவராகவே இருக்கின்றேன். எனினும், சிலர் அந்த கட்சியில் இணைந்துள்ளனர்.
தற்போது சிறிலங்கா சுதந்திர கட்சி மீண்டும் சரியான பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது. இது மிகவும், மகிழ்ச்சியை தருக்கின்றது.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியை வெற்றிபெற செய்வதற்கு தனது முழு ஆதரவையும் வழங்குவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டார். மீண்டும் மகிந்த ராஜபக்ச ஆட்சி பீடம் ஏறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
எனினும், பொதுஜன பெரமுன கட்சி சார்பில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, அவர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால், பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் குமார வெல்கமவிற்கு எதிராக திரும்பினர். இந்நிலையிலேயே, குமார வெல்கம சுந்திர கட்சியை ஆதரித்து பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment